குறள் வாயில்
திருவள்ளுவர் அருளிய திருக்குறள் என்னும் உலகப் பொது மறை எல்லாக் காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் வாழ்க்கையின் வழிகாட்டியாகத் திகழ்ந்து வருகின்றது. பெறுதற்கரிய பிறைவியாகிய இம்மானிடப் பிறவியில் வாழ வேண்டிய முறையில் வாழ்ந்து கடமையுணர்ந்து சிறப்புடன் வாழ்வதற்கு உரிய செந்நெறிகளையெல்லாம் முறைப்படுத்தி அளித்தவர் திருவள்ளுவர் ஆவார்.
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப் பால் என்று மூன்று பெர்ம் பிரிவுகளைக் கொண்டதாகும். திருக்குறள் மொத்தம் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களைக் கொண்டதாகும். ஒவ்வொரு அதிகாரமும் பத்துக் குறட்பாக்களைக் கொண்டிருக்கின்றது. ஆகா, திருக்குறளில் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள் இடம் பெற்றுள்ளன.
'பால்' என்ற பெரும் பிரிவுக்குள் இயல் என்ன பெயரில் சிறு பிரிவுகள் அடங்கியுள்ளன. அறத்துப்பாலில் பாயிர இயல், இல்லற இயல், துறவற இயல் என்பதாக மூன்று இயல்கள் உள்ளன.
பொருட்பாலில் அரசியல், அங்க இயல், ஒழிபியல் என மூன்று இயல்கள் உள்ளன.
காமத்துப்பால் களவியல், கற்பியல் என்ற இரண்டே இயல்களைக் கொண்டிருக்கின்றது.
அறத்துப்பாலில் உள்ள முதல் இயலான பாயிர இயலில் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆக நான்கு அதிகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அறத்துப்பாலில் இரண்டாவது இயலாக அமைக்கப் பட்டுள்ளது இல்லற இயலாகும். இந்த இயல் இருபது அதிகாரங்களைக் கொண்டதாகும். அவையாவன:
இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், புதல்வரைப் பெறுதல், அனுபுடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றியறிதல், நாடு நிலைமை, அடைக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறனில் விழையாமை, புறங்கூறாமை, பயனில் சொல்லாமை, தீவினையச்சம், ஒப்புரவறிதல், ஈகை, புகழ்.
- திருக்குறள் வீ.முனிசாமி
No comments:
Post a Comment