திருக்குறள் சிந்தனைகள்

Posted Print Friendly and PDF

முனைவர்.செ.வை.சண்முகம்.

குறள் வாசிப்பு
 
என்னுடைய குறள் வாசிப்பு வரலாறு நீண்டது.

1980- களில்அரசு பேருந்தில் எழுதப்பட்ட குறள் ஒவ்வொன்றையும் பயணம்செய்யும் முழுவதும் சிந்தித்ததால் தோன்றிய நயங்களே இலக்கியக்கல்வியில் ஈடுபாட்டை உண்டாக்கியது. என்னுடைய இலக்கிய ஆய்வே பேருந்துக்குறள் வாசிப்பிலிருந்து தான் தொடங்கியது.

அண்ணா நூற்றாண்டு விழா அரங்கம் தஞ்சையில் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள்
முனைவர் செ.வை.சண்முகம் அவர்களுக்கு விருது வழங்கினார்கள்.

எங்கள் தந்தை

எங்கள் தந்தையர் நாடெனும் போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே" மகாகவி பாரதியாரின் வாக்கு.

அய்யா பழ.நெடுமாறன் அவர்களின் தந்தை அறநெறியண்ணல் தமிழறிஞர்கி.பழநியப்பனார்.மதுரை மாவட்டத்தமிழத்தொண்டர் கழகம்- அதன் நிறுவனர் செயலாளர் பஞ்சாலைக் கவிஞாஅ;வர்களின் தந்தை க.சண்முகசுந்தரம் அவர்கள் அஞ்சலக ஊழியராகப் பணியாற்றியவா.; முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுநாதம் அவர்கள் பரிந்துரையால் கருமுத்து தியாகராசரின் அறக்கட்டளையின் அலுவலக  நிர்வாகியானார்.
தழிழறிஞர் கி.பழநியப்பனாரின் அறையிலேயே தங்கும் வாய்ப்பு திரு.க.சண்முக சுந்தரத்திற்குக் கிட்டியது. அந்த நாட்களில் நண்பர்கள் இருவரும் பழமுதிர்ச்சோலைக்குச் செல்கின்றனர். பழமுதிர்ச்சோலை குடமுழுக்கு முன்னாள் சென்னை மாகாண முதல்வர் பி.டி.ராசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் வடக்கு ஆடி வீதியில் உள்ள திருவள்ளுவர் கழகதத்தின் கம்பி வேலியில் மதுரை மாவட்டத் தமிழ்த் தொண்டர் கழகத் தகவல் பலகையை இன்றும் காணலாம்.பராமரித்து வரும் அதன் செயலாளர் புலவர் சு.இராமச்சந்திரன் அவர்கட்கு நன்றி

பஞ்சாலைக்கவிஞர் ச.இளமுருகன்

தினமலர் புத்தகக் கண்காட்சி அரங்கு

மனிதத் தேனி இரா. சொக்கலிங்கம், முனைவர் இரா. மோகன்,  நேதாஜி சுவாமிநாதன் மற்றும் அரங்கு நிறைந்த மதுரை மக்களிடையே உலகத் தமிழ்சங்கம் தனி அதிகாரி பொறுப்பு உயர்திரு. க.பசும்பொன் அவர்கள் 'ஆகாசவாணி என்பதற்கு பதில் திருச்சி வானொலி நிலையம்என அறிவித்தால் ஒழிய அங்கு சொற்பொழிவாற்ற வரமாட்டேன் என கடிதம் எழுதியவர் அறநெறியண்ணல் அவர்கள்" போன்ற தகவல்களை சுமந்து செல்பவர் பஞ்சாலைக் கவிஞர் ச. இளமுருகன் அவர்கள் எனக் குறிப்பிட்டார்கள்.
      
பசுமையான நினைவுகள்

"அன்ன சத்திரம் ஆயிரம் கட்டல்
 ஆலயம் பதினாயிரம் நாட்டல்
 அன்ன யாவினும் புண்ணியம் கோடி
 ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்".

என்பது மகாகவி பாரதியார் வாக்கு. ஓர் ஏழைக்கு எழுத்து
அறிவிபபது கோடிப்புண்ணியம். ஆண்டு தோறும் பல நூறு மாணவர்களுக்கு எழுத்தறிவு ஊட்டும் பணியை ஆற்றும் திருமலைசுப்பு செட்டியாரவர்களது குடும்பத்தாரின் சீரிய கல்வித்தொண்டு பெரும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது. இக்கல்வி நிலையத்துடன் பன்னிரெண்டு ஆண்டுகள்நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தேன். அதுபோழ்து நடந்த மறக்க முடியாத ஒரு சில நிகழச்சிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

1940 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் கோம்பை நகர் அஞ்சலகத்தலைவனாகப்பொறுப்பேற்றேன். ஊரோ புதிது. ஊரிலுள்ள மக்களெல்லாம் எவ்வாறு இருப்பார்களோ என்றெல்லாம் சிந்தித்தது உண்டு. சிறிது அச்சப்பட்டதுமுண்டு. மக்கள் எவ்வளவு நல்ல மனம் படைத்தவர்கள்  நற்செயல்களுக்கு எத்துணை ஆரவத்துடன் பேராதரவு தருபவர்கள் என்பதெல்லாம் நாட்கள் செல்ல செல்லத்தெரிய வந்தது.

அவ்வாறு இல்லையெனில் எனது இல்லத்திலேயே சிறு அளவில் தொடங்கப்பட்ட "தமிழ் இல்லம் " நாளடைவில் பெரிதாக வளர்ந்து நாடு முழுவதும் குறளைப்பரப்பியிருக்க முடியுமா?கம்பம் பள்ளத்தாக்கு குறிப்பாகக்கோம்பை மக்களின் றல்லாதரவு இல்லா விடில்  மதுரை மாவட்டத் தமிழ்த்தொண்டர் கழகம் தோன்றித் திருக்குறள் அட்டைகள் தகரங்கள் திரைப்பட விளம்பரங்கள் ஆயிரக்கணக்கில் ஆக்கித் தமிழர்கள்வாழுமிடமெலாம் அனுப்பி குறள் மணம் கமழச்செய்ய முடிந்திருக்குமா?

இத்துணைத்தொண்டுகள்  நிகழ்வதற்கும் ஒரு நிலைக்களனாகத்திகழ்ந்து இன்று பொன்விழாக் கொண்டாடும் பள்ளிக் கட்டிடம் பள்ளிப் பொறுப்பாளர்கள் உற்ற உதவியும் தடையின்றிக்கிடைத்தது. திங்கள் தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள்வாரக்கூட்டங்கள் தமிழர் திருநாட்கள் ஆண்டுவிழாக்கள் திருக்குறள் போட்டிகள் பாரதி பாடல் போட்டிகள் சொற்பொழிவுகள் எல்லாம் தமிழ் இல்லத்தின் சார்பில் இப்பள்ளியில் நடைபெற்ற பொழுது சுற்றுப்புறக்கிராமங்களிலிருந்தும் பல வெளியுhர்களில் இருந்தும் மக்கள் சாரி சாரியாக வந்து கண்டு களித்ததை யாரால் மறுக்க முடியும்.

தம்பி கேள்

தெருவிலே நடந்துபோய்க் கொண்டிருந்தேன்.கல்லூரி
படிப்பும் பயனில்லை ...... யோசித்து நன்றாய் உணரணும்.... உலக அனுபவம் உண்டாகணும்.... டடடா டடடா டட்டடா என்ற இசைத்தடடின் ஒலி சில வருடங்களுக்கு முன நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றை என் நினைவுக்குக் கொண்டு வந்தது.

என் வீட்டிற்கு அடுத்த வீட்டில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மாணவன் ஒருவன் தனது தாயாருடன் வசித்து வந்தான்.

ஒரு நாள் காலை எனது அலுவலக வேலையை முடித்து வீடு திரும்பினேன்.அடுத்த வீட்டில் அழுகையும் கூச'சலும் ஏக ரகளையாக இருந்தது. "பாவம் ! யாருக்கு என்ன ஆபத்தோ? என மனம் கலங்கி விசாரித்து வரலாமென அவரகள் வீட்டில் நுழைந்தேன். என்னைப் பார்த்ததும் அக்கல்லூரி மாணவன்" எங்களைத்தவிக்க விட்டு விட்டு
எங்க மாமா போயிட்டாங்களே அண்ணா' என்று கூச்சலிட்டு
அழத்தொடங்கினான். அவனது தகப்பனார் காலமான பின்
அவனது தாய்மாமன் உதவியால் தான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான்.உலகத்தில் தங்களுக்கு உதவி செய்யக்கூடிய ஒரே ஆத்மாவையும் பறி கொடுத்து விட்டால் எப்படி இருக்கும்!எனக்கும் அச்செய்தி வருத்தத்தைக் கொடுத்தது. ஆனால் ஒரு சந்தேகம் எழுந்தது.தம்பி!உன் மாமா இறந்த செய்தி எப்படிக்கிடைத்தது?"என விசாரித்தேன்.பக்கத்திலிருந்த  கடிதத்தை சுட்டிக்காட்டினான்."டெட் லெட்டர் ஆபீசு என்று தலைப்பில அச்சடிக்கப்பட்டு கிழே அம்மாணவனுடைய விலாசம்எழுதப்பட்ட  கடிதம் பிரிக்கப்படாமல் இருந்ததைக்கண்டு ஆச்சரியமடைந்தேன்' "இந்தக்கடிதம் தானா "வியப்புடன் கேட்டதற்கு "ஆமாம்" என்று தலையசைத்தான். கடிதத்தின் உறையைக்கிழிதது இறுந'து போனதாகககருதப்படும்; அவனுடைய மாமா கைப்பட எழுதிய கடிதத்தை வெளியே      எடுத்துக்கொடுத்து ' நன்றாக பிரித்து வாசித்துப்பார!முதலில உனது தாயாரை அழுகையை நிறுத்தச்சொல். என அன்புடன் கட்டளை இட்டேன்.;

நடந்த விபரம் இதுதான் அவன்மாமா  உடல் நலம் குறைவாயிருப்பதாக அவன் ஊரிலிருந்து வந்த ஒருவர் கூறினாராம்.சில நாட்களாக மாமாவிடமிருந்து கடிதங்களும் இல்லை. திடீரென :டெட் லெட்டர் ஆபீசு " என்று அச்சடிக்கப் இந்த உறை வந்;து சேர்ந்தது. "டெட் லெட்டர் ஆபிசு " என்றால் என்ன என்பது பையனுக்குத்தெரியாது.டெட் லெட்டர செத்த கடிதம் என்று பொருள் கொண்டு  ஐயையோ மாமா போய்ட்டாங்களே என்று அலறத்தொடங்கினான். கல்லூரியில்படிக்கும் மாணவனே  அவசரப்பட்டு அலறத்தொடங்கும்பொழுது பெண்களைப் பற்றி கேட்கவா வேண்டும. அவனுடைய தாயாரும் தனதுஒப்பாரியைத்தொடங்கி விட்டாள்'நல்ல வேளையாக அடுத்த 3 மணி நேரத்திற்கு ரெயில் இல்லாததால் உடனே புறப்பட்டு செல்ல விலலை.

வெளி ஊரில வசித்து வந்த அவனுடைய மாமா இறந்து போன செய்தி எவ்வாறு வந்திருக்கும்?தந்தி வந்ததாகத தெரியவில்லையே? காலை முதல் நான் மட்டும் தானே தந்தி அலுவலகததில் வேலை செய்திருக்கிறேன்! ;அவ்வாறிருக்க என்னையறியாமல் அவர்கள் வீட்டிற'கு தந்தி எவ்வாறுவர முடியும'.உடன்பிறந்த சகோதரிக்குத் தந்தி கொடுக்காமல் சாவகாசமாக சாதாரணமாக கடித வாயிலாகவா இறந்த செய்தியைத் தெரிவித்திருப்பார்கள் எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

அவனுடைய மாமா அவசரத்தில் விலாசமே எழுதாமல் உறையை தபால்பெட்டியில போட்டு விட்டார்.மேலே விலாசம. ஒனறுமில்லாததால் அதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள டெட் லெட்டர் Nபீசுக்கு அனுப்பப்பட்டது. அங்கு அதைப்பிரித்துப்பார்த்தார்கள் நல்ல வேளையாக இந்த மாணவனுடைய விலாசம் உள்ளே எழுதபபடடிருப்பது அந்த விலாசத்தை டெட் லெட்டர் ஆபிசு எனறு அச்சடிக்கப்பட்ட தங்கள் ஆபீசு உறையில் எழுதித்தபாலில் அனுப்பி விட்டார்கள். டெட் லெட்டர் என்றால் செத்த கடிதம் என்று பொருள்கொள்வார்கள் என தபால் தந்தி இலாகாவினர் கண்டார்களா?

நோய் தீர்க்கும் மருந்து

பாண்டியமன்னன் அழகிற் சிறந்தவன்.  கண்டவர் யாரும் மையல் கொள்ளும் கட்டழகன்.  யானைமீதேறி பவனி வருகிறான். ஒரு தெரு வழியாக வரும் பொழுது அத்தெருவிலுள்ள பெண்கள் அனைவரும் மன்னனின் அழகைக்கண்ணால் கண்டு பருக தெருத் திண்ணைகளிலும், மேல் மாடிகளிலும் கூடியிருக்கின்றனர்.

திருமணமாகாத ஓர் இளம் பெண,  அவளும் அரசனைக் காண விழைகின்றாள். அவளுடைய தாய் வெளியே செல்லும்பொழுது, அவளும் பின்தொடருகின்றாள்.  'மகள் மன்னனின் அழகை கண்டு நிச்சயமாக காதல் நோய் பற்றிக்கொண்டால், அன்ன ஆகாரம் இல்லாமல் உடல் மெலிந்து கைவளையல்கள் சோர்ந்து விழுந்து விடும்;, எட்டாக் கனிக்கு கொட்டாவி விட்டு ஏங்குவது பயனில்லை. வெள்ளம் வருமுன் அணை போட வேண்டியது நமது கடமை. ஆதலால் மன்னனைக் கண்;ணால்; பார்க்கவிடக் கூடாது" என்ற முடிவுக்கு வந்தாள். 'மகளே உனக்குத் திரட்டுப்பால்வைத்திருந்தேன! எடு;த்து கொண்டாயா? எடுத்து சாப்பிடம்மா! என்று உபசாரமாகக் கூறினாள். இப்பொழுது எனக்கு வேண்டாமம்மா! இரவு எடுத்துக் கொள்கிறேன்" என மறுத்தாள் நங்கை. தன் தந்திரம் பலிக்கவில்லையென அறிந்த தாயும் விடாப்பிடியாக 'நானும் சாப்பிடவில்லையம்மா! எனக்காவது சிறிது எடுத்துக் கொண்டு வா" என கட்டளையிட்டாள். தாய் வேண்டு;மென ஆசையோடு கேட்கும் பொழுது தட்டிச் செல்ல  முடியுமா! திரட்டுப் பாலை எடுத்துவர உள்ளே சென்றாள்;. அச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தாய் வேகமாக வெளியே சென்று வாசற் கதவைப் படாரெனச் சாத்தி, வெளிப்பக்கம் தாழிட்டுக் கொண்டாள். திரட்டுப் பாலுடன் வந்த மங்கை வாசற்கதவு முன்புறம் தாழிடப்பட்டிருப்பதைக் கண்டதும், தாயின் சூழ்ச்சியை ஒருவாறு உணர்ந்து ஆத்திரங் கொண்டாள். பலங்கொண்ட மட்டும் கதவைத் தட்ட கதவு திறப்பதாக தோன்றவில்லை. மன்னனின் பவனி நெருங்கி வருவதை, வெளியே நடக்கும் ஆரவாரத்தால் அறிந்;தாள். அறிந்து என்ன பயன்?  தான் பல நாட்களாக கண்டு வந்த கனவு, நனவாக மாற வாய்ப்பு கிட்டிய சமயம், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதவாறு தடுத்த தாயை தனது பரம விரோதியாக மதித்தாள். அரசனின் அழகையும், புகழையும், வீரத்தையும் தனது தோழிகள் பல முறை புகழக் கேட்டு தன்னையறியாத ஓர் இன்ப உணர்ச்சிக்கு உள்ளாகியிருந்த நங்கை, செயலற்று, உள்ளம் சோர, உடல் சோர கீழே அமர்ந்தாள்.

தனது வீட்டு வாசலிலேயே ஆரவாரம் கேட்டது: ஊர்வலம் தனது வீட்டை நெருங்கிவிட்டதென்பதை ஊகித்தாள்.  திடீரென நினைவிற்கு வந்தவளாக, குதித்துக்கொண்டு வேகமாக மாடிப்படியேறி, மேல் மச்சுக்கு வந்தாள். அவளுடைய உற்சாகத்தில் ஒவ்வொரு படியாகக் கால் வைத்தாளோ அல்லது இரண்டு மூன்று படிகளாகத் தாவினாளோ தெரியாது. ஆனால் அங்கும் பெரிய ஏமாற்றமே காத்திருந்தது. முன் எச்சரிக்கையாகத் தாய்.  மேல்மச்சுக் கதவையும் பூட்டியிருந்ததைக்கண்டு ஆத்திரம், கோபம், அழுகை எல்லாம் கலந்து பீறிட்டு கொண்டு வந்தன. சோர்வுடன் தரையில் உட்கார்ந்தவள். எதிரேயுள்ள சன்னலைக் கண்டதும், புத்துணர்ச்சி பெற்று , வேகமாக எழுந்து சன்னல் கதவுகளைக் படாரென்று திறந்து கொண்டு கீழே நோக்கினாள் ஆகா! என்ன அழகான காட்சி! 'கண்டேன் கண்டேன், கண்ணாரக்கண்டேன்" என்று உள்ளம் பெருமிதத்தால் விம்மியது.  உளம் நிறைந்த மகிழ்ச்சி; : அ;ந்;த இடத்தில் சன்னல் வைத்துக் கட்டிய கொத்தனை மனதுக்குள் பாராட்டினாள்.  சன்னல்;கதவுகளைப் படாரெனத்திறக்கும் பொழுது  ஓர் ஓசை கேட்டதல்லவா? அவ்வமயம் மன்னனும் சத்தம் வந்த திசையை நோக்கியதால்; தனது கண்களை ;  ; ஒன்றை யொன்று கவ்வியதாகவும் ஓர் நினைவு எழுந்தது. அந்த இன்பக் கனவிலேயே அங்கிருந்த படுக்கை அறையிற் சாய்ந்து கண்களை இறுக மூடிக் கொண்டாள். கண்களைத் திறந்தால் மன்னனின் உருவம் மறைந்து விடுமோ என்ற அச்சம்.  இராமனை முதன் முதல் சீதை மேன்மாடத்திலிருந்து கண்ட காட்சியைக் கம்பர் வருணித்திருப்பது அவளுடைய நினைவிற்கு வந்தது. தனது வாழ்க்கையிலும் அதே போன்று தனக்கும் மன்னன் கிட்ட மாட்டானோ என்று உள்ளம் ஏங்கியது.

சில நிமிடங்கள் கழித்து, வாசற் கதவைத் திறந்து கொண்டு வந்த தாய், மகளைக்காணாது திகைத்தாள். வீடு முழுவதும் தேடிவிட்டு மேல் மாடிக்கு வந்தாள். கண்களை மூடிக் கொண்டு மகள் படுத்திருக்கும் கோலத்தைக் கண்டாள். இடையிடையே புன்முறுவல் பூப்பதையும். தான் எதிபார்த்ததற்கு மாறாக. மன மகிழ்ச்சியோடு மகளின் தோற்றம் இருப்பதையும் கண்டு அதிசயித்தாள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. சுற்றிலும்  நோக்கினாள். சன்னல் கதவுகள் திறந்;திருப்பதைக் கண்டதும் தான் தனது முட்டாள் தனம் விளங்கியது. மேல் மச்சுக்கு வரும் வாசற் கதவைப் பூட்டாமல் விட்டது தவறு என்பதை உணர்ந்தாள். இனி என் செய்வது?  சன்னல் வழியாக மன்னனைக் கண்டு, அவனது அழகில் மனதைக் பறிகொடுத்து விட்டாளென்பதை அனறு; உணர்ந்தாள்.உள:ளக:கழித:தலும: காண மக்ழ்தலும் கள்ளுக்மில்லைகாமத்திறகுணடு;

யார் பெரியவர்?


'ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்;" என்பது பண்டைய தமிழன் கடைபிடித்து வந்த சீரிய கொள்கை. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்றார் வள்ளுவர், அதே உணர்ச்சி இன்றும் மக்களிடையே பரவி வருகிறது.

'எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம்" என்றும்,

'உடன் பிறந்தவர்களைப்போல் -இவ்வுலகில்
மனிதர் எல்லோரும்
இடம் பெரிதுண்டு வையத்தில் - இதில்
எனக்குச் சண்டைகள் செய்வீர்?"

என்றும் பாரதியின் முரசொலி எங்கும் இந்நாளில் கேட்கின்றது.  ஆனால் இடைக்காலத்தில் ஜாதி மதப் பூசல்கள் நாட்டில் மிகுதியாகக் பரவிருந்தன எனத் தெரியவருகிறது. சமணர்களும் பௌத்;தர்களும், வைணவர்களும் சிவனடியார்களைப்; பூச்சாண்டி விபூதியைக் கட்டாக அணிந்த ஆண்டி என்று கேலி செய்தார்கள்.  அவர்கள் உண்டாக்கிய அச்சொல் இன்று குழந்தைகளைப் பயமுறுத்துவதற்காக உபயோகப்பட்டு வருகிறது.  கவி காளமேகத்தினிடம் கூட இந்த மத வேறுபாடு இருந்ததென்பதை அவருடைய வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. கவி காளமேகம் பிறப்பில் வைணவர் என்றும் பின்னால் ஒரு சந்தர்ப்பத்தில் சைவ மதத்தைத் தழுவிக் கொண்டார் என்னும் சொல்வதுண்டு.
ஒரு நாளிரவு, பெரிய மழை கொட்டுவதற்கான அறிகுறிகள் தோன்றிக் கொண்டிருந்தன.  நல்ல இருட்டு திருச்சியையடுத்த கண்ணபுரம் என்;;ற ஊருக்கு வந்து சேர்ந்தார். கண்ணபுரத்தில் வைணவர்களைத் தவிர வேறு மதத்தவர்களே கிடையாது. அவ்வூரின்  மத்தியில்; அழகிய திருமால் கோவில் ஒன்றுண்டு. காள மேகத்திற்கோ கடு;ம் பசி காதை அடைக்கிறது.
'வைணவர்களே நிறைந்துள்ள இவ்வூரில் வந்து மாட்டிக்கொண்டோமே , என் செய்வது? நான் சைவ மதத்தை தழுவிக் கொண்டவன் என்று அறிந்தால் தங்கக்கூட இடம் கொடுக்க மாட்டார்களே? நமது பசிக் கொடுமையைக் கூறி , என்னதான் கதறினாலும் , வேற்று மதத்தானுக்கு ஒரு வேளை சோறு போட மாட்டார்களே! என்று கலங்கினார். திருமாலின் கோவில் கண்ணுக்கு தெரிந்தது. கோவிலுக்கு சென்றால் . பட்டை சோறு கிடைக்கும். ஆனால் நமது விபூதிப் பட்டையை அழித்தாh.; சில விநாடிகளில் பெரிய பட்டை நாமத்தை சார்த்திக் கொணடார்; கோவில் அலுவலர்கள் 'நீர் யார்?"  என விசாரித்தார்கள். 'ஐயா, நான் ஒரு ஏழைப் புலவன். பசி மிகுதியாகயிருக்கிறது.  சுவாமி பிரசாதம் ஏதாவது கிடைக்குமா என்று பார்க்க வந்தேன்" என்று விடையளித்தார். 

'ஓ! நீர் ஒரு புலவரா! கவிதைகள் எல்லாம் நன்றாய் இயற்றுவீரா? அவ்வாறாயின் எமது திருமாலைப்பற்றி ஓர் பாட்டுப்பாடும் வயிற்றுக்கு உணவு தர செல்கிறோம்." என்றார் கோவில் நிருவாகி, ஏற்கனவே மன ஒப்புதலில்லாமல், வேடம் தரித்துக்கொண்டு வந்தவர் மனமொப்பி திருமாலை புகழ்ந்து பாடாவிட்டாலோ சாப்பாடு கிடைக்காது.  இகழ்ந்து பாடினாலோ முதுகுக்கு  சாப்பாடு கிடைக்கும்.

குமுறிக்கொண்டு இருக்கிறது. எந்த நேரத்தில் மழை; கொட்டுமோ, தெரியாது. காரிருள் மழை நேரத்தில் வேறு எங்கு செல்வது? இக்கட்டான  நிலையில் மாட்டிக் கொண்டோமே என வருந்தினார்.  சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் புலவரை கண்ணுற்ற  கோவிலார்கள், பாடல் இயற்றுவதற்கு சிந்தனை செய்து கொண்டிருக்கிறார் இன்னும்  சில விநாடிகளில். நமது ஒப்பற்ற திருமாலுக்கு ஓர் அழகான பாமாலை கிடைக்கப் போகின்;றதென்ற மகிழ்ச்சிக் கடலில் திளைத்து கொண்டிருந்தனர், கவி காளமேகம் வாய்  அசைவதைப் கண்ணுற்;றதும் நெருங்கி உட்கார்ந்து கொண்டனர் 'கண்ணபிரானே கடவுளினும் நீ அதிகம்" என்ற சொற்றொடர் கவி காள மேகத்திடமிருந்து .          வந்தது.;. (கடவுள் என்ற சொல் சிவனைக் காட்டிலும் தம் திருமால் பெரியவர் எனக் கவிஞர் பாடி விட்;டாரென்று ஆனந்தக் கூத்தாடத் தொடங்கி விட்டார்கள். குறைபாட்டை அவர் வாயில் எதிர் நோக்கி நின்றார்கள்.

'ஐயா! பசி மிகுதியாருப்பதால் பாட முடியவில்லை சாப்பாடு போட்டால் சாப்பிட்டு விட்டு பாடுகிறேன்" என்று தயவாகக் கூறினாh,; காளமேகம் சிவனைக் காட்டிலும்; திருமால் பெரியவர் என்று தொடங்கப்பட்ட பாடலைக் கேட்டு மகிழ்ந்த நிருவாகிகள் கவிஞர் கூறுவதும் உண்மையென உணர்ந்து, தடபுடலாக உபசரித்து உணவளிக்கிறார்கள்.   

அதுவும் கடும் பசியாக இருந்து பின்னர் உண்டதால் மிகக் களைப்பாயிருக்கிறது.  ஓய்வெடுத்துக் கொண்டு, காலை எழுந்ததும் முதன் முதலில் தங்கள் பாடலை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு இந்த இடத்தை விட்டுப் போகிறேன். அதிகாலையில் தான் நன்றாகப் பாட வரும் என்று சமாதானம் கூறினார். கோவிலாரும் இசைந்தனர்.

பொழுது புலர்ந்தது. களைப்பு நீங்கி உற்சாகமாக எழுந்தார். கவிஞர் நிருவாகிகளும் பன் மடங்கு உற்சாகத்துடன் எழுந்து கவிஞன் முன் கூடினார்கள். அடுத்த அடி எவ்வாறு இருக்குமோ சிவபெருமானை ; மட்டம் தட்டுவான் கவிஞன் ; கோவிலஅதிகார்p;களின் கற்பனை ஓடியது. கண்ணபுரமாலே கடவுளினும் நீ அதிகம் உன்னினுமோயானதிகம் என்று கூறக்கேட்டதும் அங்கிருந்தவர்;களுக்கு கோபம் படபடவென வந்தது.  இப்புலவருக்கு என்ன திமிர்? நமது திருமால் பெரியவர் எனக்கூறினார்.  ஒப்புக் கொண்டோம் சாப்பாடும் போட்டோம் காலை எழுந்ததும் பாட்டின் போக்கையே மாற்றுகிறாரே?  வயிறு நிறைந்து விட்டால் இந்த கவிஞர்களுக்கு திமிர்மிகுந்திடும் போலும் நமது திருமாலைக் காட்டிலும் தான் பெரியவன் என்று கூறுகின்றாரேஅபசாரம்அபசாரம் இதைப் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது." என்று புலவரிடம் சண்டைக்குச் சென்றனர். காளமேகமா இதற்கு அஞ்சியவர்! அவர்களை கையமர்த்தி அமரசெய்து “பெரியோர்களே! ஆத்திரப்படாதீர்கள். ஆத்திரம் அறிவுக்குப்பகை, நான் கூறுவதை  முழுவதையும் பொறுமையாக கேளுங்கள். நான்  கூறப்போகும் காரணம் பொருத்தமாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையாயின் தள்ளிடுங்கள். என சமாதானம் கூறி மீண்டு;ம் பாடலை தொடங்கினார்.

உங்கள் மகா விஷ்ணு பத்து அவதாரம் எடுத்ததாக ஒப்புக் கொள்கிறீர்கள். அல்லவா?  என்று கேட்ட 'ஆஹா! ஒப்புக்கொள்;கிறோம். எங்கள் பகவான் உலக  நன்மைக்காக எழுந்தருளினார். எனறு ஒப்புதலை தெரிவித்தார்கள்". அது மாதிரி சிவன் ஏதாவது அவதாரம் எடுத்ததாக தெரிகிறதா? என்று மீண்டும் கேட்டார் கவிஞர் 'இல்லை இல்லவே இல்லை” என்றனர். ஆம் அதைத் தான் நான் குறிப்பிடுகிறேன் கேளுங்கள் பாட்டை உடன்பிறப்போ பத்தாம் உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை.

சிவன் உலத்திலே அவதாரமே எடுத்ததில்லை, அவர் ஒருவர் தான். பத்து அவதாரம் எடுத்த மகா விஷ்ணு அவரை விடப் பத்து மடங்கு பெரியவர். நானாகிய நான் எத்தனை பிறவிகள் இந்த உலகத்தில் எடுத்திருக்கிறேனென எண்ண முடியாது. அவ்வகையில்  விஷ்ணுவைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு பெரியவர்" என்ற கருத்தடங்கிய பாடலைப் பாடி முடித்தார். பாடலின் முழுவுருவத்தைப் பாருங்கள்.

“கண்ணபுராமலே கடவுளிலும் நீ அதிகம் உன்னிலுமோ யானதிகம் ஒன்றுகேள் என் பிறப்போ பத்தாம் உயர்" சிவனுக்கொன்றுமிலையே என் பிறப்பு எண்ணத் தொலையாதே"அரியவற்றுளெல்லாம் அரிதே பெரியாப்பேணித்தமராக்கொளல்

விபரீதப் பிரார்த்தனை

நான் பிறந்த ராசியோ என்னவோ உலக இயற்கைக்கு மாறாகவே எனது வாழ்க்கையில் சங்கடங்கள் நிகழ்கின்றன சாதாரணமாக யாராவது உடல் நலம் குன்றி ஆபத்தான நிலையிருந்தால் நாம் என்ன விரும்புவோம்? 'சுவாமி ஆண்டவனே நோயாளியைக் காப்பாற்று அவர் சீக்கிரம் பிழைத்தெழுந்து உடம்பு தேறினாலும் உனது கோவிலுக்கு வந்து மாவிளக்கு ஏற்றி வைக்கிறேன்.  காணிக்கை செலுத்துகிறேன் என்று தான் யாரும் பிரார்த்தனை செய்துகொள்வர் ஆனால் எனது வாழ்க்கையில் ஒரு சந்தர்பப்த்தில் அதற்கு நேர்மாறாக பிரார்த்தனை செய்யும் படி நேரிட்டத. ஆண்டவனே சீக்கிரம் உயிரை போக்கு ஐயோ ரயில் வந்து விடுமே பெற்ற மகன் வந்து பார்ப்பதற்குள் அந்த அக்காளின் உயிரை கவர்ந்து சென்று எனது மானத்தை காப்பாற்றுங்க முருகர்பொய்யன் என்ற பட்டத்தை வாங்கக்p கொடுத்து எல்லோரும் என்னைத் திட்டும் படி செய்துவிடாதே அடிப்படையான ;  தன்னோக்கத்தை உணர முடியாத மக்;கள் நான் செய்யத் தகாத காரியத்தை செய்து விட்டதாக கருதி என்னை ஏசுவார்கள் கிழவியின்; உயிர் போய்விட்டால் அந்த சங்கடமெல்லாம் எனக்கு வராதே ஆதலால் கிழவியின் உயிர் போக்;கி மானத்தைக் காப்பாற்று 'கடவுளை வேண்டிக் கொள்ள வேண்டிய அபூர்வமான சம்பவம் நடந்தது என் வாழ்க்கையில் கேளுங்கள்.

எனது பக்கத்து வீட்டில்குடும்பம் இளம் வயதிலேயே கணவனை இழந்து தனது ஒரே மகனை சீராட்டி பாராட்டி காப்பதில் ஆறுதலைடைந்து அத்தாய் சொத்திலிருந்து சொற்ப வருமானம் வருவதை கொண்டு எளிய வாழ்க்கையை தக்க வைத்து கொண்டு பள்ளிக்கு அனுப்பி தாயின் சிரமத்தை உணர்ந்து நன்கு தனயனும் ஒழுங்காக கற்று தேர்ந்து வளர்த்த யாரும் குறைகூற முடியாது. ஒழுக்கமாக நடந்து. பெரியோர்களுடைய மதிப்பை பெற்றார். உத்யோகமும் கிடைத்தது. தனது வேலைத் திறமையால் மேல் உத்யோகஸ்தர்களையும் கவர்ந்தார். ஓய்வு நேரங்களில் பொதுநல பணிகளில் உற்சாகமாக பங்கெடுத்து கொண்டார், ஊர் மெச்சினர். அச்சொல் தாயின் காதிலும் விழுந்தது. மனம் குளிர்ந்தாள். 'ஈன்ற பொழுதின் பெரி;து உவக்கும் தன் மகனைச் சான்றேன் எனக்கேட்ட தாய்”  என்பது வள்ளுவர் வாக்கல்லவா?

அடுத்தபடியாக மகனுக்குமணம் முடித்து கண் குளிரைக்காண வேண்டுமென்ற ஆவல் உண்டாகியது அத்தாய்க்கு, பெண் பார்க்கத் தொடங்கினான். முன்னுக்கு வரக்கூடிய நல்ல பையன் என்பதை அறிந்த பலர் நான் , நீ எனப் போட்டியி;ட்டுக் கொண்டு வந்தனர். வறுமையிலேயே உழன்ற தாய்க்கு ஒரு பெரிய பணக்கார வீட்டில் பெண்ணெடுக்க வேண்டுமென்ற ஆவல் தோன்றியது இயற்கை, தாய் சொல்லைத் தட்டி அறியாத மகனும் தாயார் பார்த்துவந்த பெரிய இடத்துப் பெண்ணை மணக்க மறுக்காமல் ஒப்புக் கொண்டார். ஓர் நல்ல நாளில் திருமணம் சிறப்பாக நடந்தது.

சுமார் 6 மாதங்கள் புதுப் பெண் தனது மாமிக்கு அடங்கியே நடந்து வந்தாள். பின்னர் செல்வச் செருக்கில் திளைத்த அப்பெண்ணுக்கு மாமியார் வீட்டில் எளிய வாழ்க்கை நடத்த மனமில்லை. எதற்கெடுத்தாலும் தாயிடமே ஆலோசனை கேட்பதும் தாயின் லாக்கைச் சிரமேற்கொண்டு தனது கணவன் பணிந்து நடப்பதையும் வெறுத்தாள். தனியே சந்திக்கும்பொழுது மாமியை பற்றிக் குறை கூறிக்கொண்டே வந்தவள் நாள் செல்ல செல்ல வெளிப்படையாகவே கண்டிக்;க தொடங்கினாள். இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்தார் அவ்வாலிபா,; சில நாட்களுள்இறுதி வெற்றி இளம் மனைவிக்கெனக் கூறவும் வேண்டுமோ?  மனைவியின் கண்ணீருக்கு சாகசத்திற்குள் கட்டுப்படாத கணவனும் உண்டோ? ஒற்றுமையாக இருந்த  குடும்பம் பிளவுபட்டது.

தாயுடன் சண்டையிட்டு கொண்டு தன் மனைவியை மட்டும் அழைத்து கொண்டு மாமியார் வீட்டில் அடைக்கலம் புகுந்து உத்யோகத்தையும்; அவ்வூருக்கு மாற்றிக்கொண்டார். நாட்கள் உருண்டோடின, பத்து மாதம் சுமந்து பெற்று பாலூட்டி தாலாட்டி வளர்த்து ஆளாக்கி விட்ட தாயின் நினைவே அற்று விட்டது  மகனுக்கு. 'சிறு பிள்ளைகள் கொஞ்ச நாட்களுக்கு அப்படித்தானியிருப்பார்கள். பின்னர் புத்திவரும்" என்ற நம்பிக்கையுடனிருந்தான் தாய் சிலகாலம். நாட்கள் செல்ல செல்ல நம்பிக்கையிழக்கும் படி நேரிட்டது. 'பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம்கல்" என்ற பெரியோர் வாக்கு மெய்யாகியது.  சதா மகனுடைய நினைவு வந்து வருத்த தொடங்கியது.  கண்கள் இரண்டும் நீரை வடித்து கொண்டேயிருந்தன.  தெருவில் தனது மகனையொத்த வயதுடைய கட்டிளங்காளை  யாராவது செல்வதை பார்த்தால் அத்தெரு முனைக்கு செல்லும் வரை அவனையே கண் கொட்டாது பார்த்துக் கொண்டிருந்து பின்னர் அவனுடைய உருவம் கண்ணுக்கு மறைந்ததும் ஆழ்ந்த பெருமூச்;செறிவாள். கணவனுடைய அன்பை நீண்ட காலம் அனுபவிக்க  முடியாது போன வருத்தத்தை மகனுடைய முகத்தை பார்த்தாவது தீர்த்து வந்தோமே, அது கூட கடவுளுக்குப்  பொறுக்கவில்லையே என்று எண்ணி எண்ணி  ஏங்கினாள்;. இவ்வளவிற்கும் மகனைப் பற்றியோ, மருமகளை பற்றியோ குறை ஒன்றும் கூறமாட்டாள்.

ஊக்கத்துடன்இருந்தாள்,  பக்கத்து வீட்டு பெண்கள் யாராவது ஒற்றுமையாக இருந்த குடும்பத்தை குலைத்து குட்டிச்சுவராக்க வந்தாளே இக்குடி கேடி 'என மருமகளைத் தி;ட்டினாலும் என் கஷ்டகாலம் அவன் என் செய்வான் கடைசி காலத்தில் மகனையும் மருமகளையும் விட்டுப்பிரிந்து கஷ்டப் படணும்னு என் தலையிலே எழுதியிருக்கிறபோது யாரை குறை கூறி என்ன செய்ய? போன பிறப்பிலே யாரைப் பிரித்துவைத்தேனோ இந்தப் பிறப்பிலே அனுபவிக்கிறேன் என்று தன்வினையை நோவாளே பழக்வினைவை கோவானே யொழிய இருவரையும் குறை கூறமாட்டான்.  அத்தாயின் அன்பையும், பெருந்தன்மையும் நினைத்து நினைத்து நினைத்து வியப்புக் கடலில் மூழ்கினேன்.  

பல முறை என்னிடம் கூறி எழுதிய கடிதங்கள் மகனுக்கும், மருமகளுக்கும்அனுப்பச, ; செய்தாள். அவள் கூற நான் அப்படியே எழுதி அனுப்புவது வழக்கம். உருக்கமான வாசகங்களிடையே அக்கடிதங்கள் கல் நெஞ்சர்களையும் இளகச் செய்து விடும். ஆனால் என்ன ஆச்சரியம்! ஒரு கடிதத்திற்காவது அவரிடமிருந்து பதில் வரவில்லை. இளகிய மனதுடைய அவர் எவ்வாறு கல்மனம் படைத்தவரானார் என எனக்கு விளங்கவில்லை.

தாய்க்கோ மகனின் ஏக்கங்கள் நாள் போல வளர தொடங்கியது.  உடல் நலிய ஆரம்பித்தது சரியாக ஆகாரம் உட்கொள்வதில்லை. 
எனது வற்புறுத்தலுக்காக உணவு அருந்தி வந்தாள். நாளாக நாளாக மோசமாகி கொண்டேவந்தது.  தாயி;ன் நிலையை விளக்கிப்பல கடிதம் எழுதினேன் கூடிய சீக்கிரம் வந்தால்தான் தாயை காணமுடியுமென எழுதினேன். 'என நோய்க்கு மருந்து நீங்கள் நேரில் வந்தால்தான் தாயை உயிருடன் காண முடியுமென எழுதினேன் மன நோய்க்கு மருந்து நீங்கள் நேரில் வந்தால் தாயின் மனக்குறை நீங்கி தெம்பு உண்டாகும்.  பெற்றெடுத்த தாயின் கடைசி; ஆசையாவது பூர்த்திசெயுங்கள். பைத்தியக்கார தனமாக நடந்து தாயை இழந்து விட்டு வருந்தாதீர்கள் தாயின் அன்பிற்கு உலகில் வேறு இல்லை.

எத்தனையோ உறவுகளை பெறலாம், அவர் அன்பையும் இவரை ஈன்றெடுத்த தாயை இழந்து விட்டால், இத்தாயை மீண்டும் பெற முடியாது". என்று எத்தனையோ முறை வலியுறுத்தி எழுதினேன்; எனது கடிதங்களை  படித்து அல்லது படிக்காமலேயே கிழித்து எறிந்துவிட்டாரா என சந்தேகப்படும் படி இருந்தது அவருடைய மௌனம்.

ஒரு நாள் மாலை அலுவலிலிருந்து வீடு திரும்பியதும் அம்மாளின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதை கேள்வியுற்று, ஓடினேன் எங்கள் தெருவிலுள்ள பெண்கள் அங்கு குழுமியிருந்தனர். காலம் நெருங்கிவிட்டதற்கு அறிகுறிகள் தென்பட்டன. பேச்சில்லை வருகிறவன் போகிறவர்களையெல்லாம் மருண்டு, மருண்டு நோக்கி கண்களில் நீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது சாகும் முன்பு மகனை ஒருமுறை பார்க்க வேண்டும் என்று ஆவல்; அவள் கண்களில்; தோன்றியது. 
வைத்தியரை அழைத்து காட்டினேன் சில மணிநேரமாவது தாண்டுவது மகாகடினம்.  காலை நிச்சயம் இறந்துவிடுவார் அந்த அம்மாவுடைய மகனுக்கு தந்தியை கொடுத்து விடுங்கள் மகன் வாதனை பெரிய வாதனையான இருக்கிறது. எனச் கூறிச் சென்றார்.

தந்திகாரரிடம் ஓடினேன் தங்கள் தாயார் சிரமமான நிலையிலிருக்கிறார் உடனே புறப்பட்டு வாருங்கள் என்று தந்தி கொடுத்து தன்னை வரவழைக்க இது சூழ்ச்சியோ வெனக் கருதி இருந்து விடுவாரோ என்று தோன்றியது  எப்படியாவது அவரை வரவழைக்க மென்று ஆத்திரத்தால்; முன் பின் யோசியாமல் தாயார் இறந்து போனாள், உடனே புறப்பட்டு வந்து அடக்கம் செய்யவும் என்ற வாசகங்களுடன் தந்தியை கொடுத்து விட்டு வீ;ட்டுக்கு திரும்பினேன்.  மனம் நொந்து நடையை தொடங்கினேன். பொய்த்தந்தி கொடுத்துவிட்டு பித்தனானேன், அத்தாய் சாக வேண்டுமெனப் பிரார்த்தனை செய்தேன். அத்தாயும் இறந்தாள். மகனும் வந்தான்? எண்ணிததுணிக கருமம் துணிநத பின் எண்ணுவோம் என்பத இழுக்கு.

வழுக்கியும் வாயாற் சொலல்
க.சண்முகசுந்தரம்
கணக்கர், தியாகராசர் பொறி இயற்கல்லூரி கட்டடப்பகுதி, திருப்பரங்குன்றம்.

ஒரு நாள் நானும் எனது நண்பர் புலவர் ஒருவரும், ஒரு சிறு சந்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தோம். நாங்கள் சென்ற சந்தில் சில மணி நேரங்களுக்கு முன் மழை பெய்திருந்ததால் சேறும் சகதியுமாக இருந்தது. ஒருசில இடங்களில் வழுக்கலும் இருந்தது. மிக எச்சரிக்கையாக நடந்து சென்றும் எதிர்பாராத விதமாக வழுக்கிக் கீழே விழுந்துவிட்டேன். எனது சட்டை வேட்டியெல்லாம் சேறாகிவிட்டன. பெரிய வீதி வழியாகச்@ செல்லலாமெனக் கூறிய எனது யோசனயை ஏற்றுக்கொள்ளாமல் குறுக்கு வழியில் விரைவில் சென்று விடலாமென எனது நண்பர் தான், அந்த வழியில் என்னை அழைத்து வந்தார். கீழே விழுந்து வேட்டி சட்டையைச் சேறாக்கிக் கொண்ட அவமானம் தாங்கமட்டாமல் நனகு;கற்ற நீங்கள் குறளில் கூறியபடி வாழ்க்கையிலும் நடக்க வேண்டாமோ? “கற்றபின் நிற்க அதற்குத் தக" என்றல்லவா நமது பெருமானார் கூறியிருக்கின்றார்?" என்றார். குதிரை தூக்கிப்போட்டது மட்டுமல்லாமல் குழியும் பறித்த கதை போன்று, மோசமான வழியில் என்னை அழைத்து வந்து கீழே வழுக்கி விழச்செய்ததுமல்லாமல் மேற்கொண்டு நையாண்டியும் செய்யத் தொடங்கியது எனக்கு அளவிலா சினத்தை மூட்டியது.

“வள்ளுவர் என்ன ஐயா கூறியிருக்கிறார்? நல்ல பாதையிருக்க மோசமான பாதையில் அழைத்து வந்து கீழே விழுந்து சேற்றைப் பூசிக்கொள்ளவா செல்லியிருக்கிறார்?" என ஆத்திரத்துடன் வினவினேன்.

“வழுக்கியும் வாயாற் சொலல்" என்று வள்ளுவர் கூறியிருப்பது தாங்கள் அறியாததல்லவே? வழுக்கி விழுந்து உடலெல்லாம் சேறு பூசிக்கோள்ள நேர்ந்தாலும் வாயினால் கூறக்கூடாது. ஒசைப்படாமல் எழுந்து ஒடி விடவேண்டும் என்றல்லவோ அவர் கூறியிருக்கிறார். வழுக்கி விழுந்த தாங்கள் வள்ளுவர் வாக்கை வாழ்க்கையிலும் கடைப்பிடிப்பவராயிருந்தால் இந்நேரம் என்னிடம் சண்டை போட்டுக் கொண்டிராமல் நேரே வீட்டிற்கல்லவா ஒடியிருக்க வேண்டும்" என நகைச்சுவை ததும்ப இனிமையாகக் கூறுகிறார் புலவர்.

“ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்"

என்ற குறட்பாவின் பின் பகுதியை அவர் தக்க சமயத்தில் கையாண்ட முறை எனக்கு வியப்பையளித்தது. மேலும் அக்குறட்பாவின் உட்கருத்திலும் சிந்தனை சென்றது எப்பொழுதும் திருக்குறள் முதலான சங்க இலக்கியங்களில் வரும் சொற்றொடர்களையே வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்குப் பொருந்த உரையாடுவதில் வல்லவரான அப்புலவரின் இக்கூற்று எனக்கு நேர்ந்த அவமானத்தையும் மறக்கச் செய்து சீற்றத்தையும் தணித்தது. சிந்தனையையும் தூண்டியது இனி அக்குறட்பாவின்  கருத்தையும் சிறிது ஆராய்வோம்.

உயிரைக்காட்டினும் சிறந்தது ஒரு எனக் கூறுகிறர் நமது செந்நா  போதார் ஒவ்வொரு மனிதனும் மிகவிரும்பிப் போற்றுவது உயிராகத்தான் இருக்க முடியும். அந்த  உயிரைக் காட்டினும் சிறந்த பொருள் ஒழுக்கம் என்று மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அது எவ்வளவு இன்றியமையாதது என்பது தெற்றென விளங்கும். உண்மையில் எல்லாச் செல்வங்களையும் தரவல்ல ஒன்று உயிரைக் காட்டினும் சிறந்ததாகத் தான் இருக்கவேண்டும். ஆதலால்தான் “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்" என்றர். ஒருவன் தோற்றத்தில் ஒழுக்கம் கெட்டவனாக காணப்படலாம். ஆயினும் ஆராய்ந்து பார்த்தால் அவன் ஒழுக்கத்தில் சிறந்தவனாக இருக்கக் காணலாம். அதே போன்று உண்மையில் ஒழுக்கசீலனாகக் காட்சியளிக்கலாம். ஆகவே ஒரு மனிதனைப் பார்த்த அளவில் அவன் ஒழுக்கம் உடையவனா அல்லது அல்லாதவனா என்பதைக் கண்டுகொள்ள இயலாது. அவனுடன் மிக நெருங்கிப் பழகினால்தான் அவனுடைய ஒழுக்கத்தைப்பற்றி ஒரு சிறிது அறிய வாய்ப்புக் கிட்டும். “மறைந்@து ஒழுகும் மாந்தர் பலர்" என்றும் ஒரிடத்தில் கூறியிருக்கிறார் நமது ஆசிரியர் பெருமான். ஆதலால் நம்முடன் பழகி மக்களை முழுவதும் அறிந்து கொள்ள வேண்டுமேனால் இம்மண் உலகம் போகின்ற வேகத்தில், இவ்வாறு ஒவ்வொருவருடனும் பல நாட்கள் பழகி அவர்களைப்பற்றி அறிந்து கொள்வது நடைமுறைக்கு ஒவ்வாத செயல். அதை எளிதில் தெரிந்து கொள்ளும் வழியைத்தான் மேற்கண்ட குறட்பாவில் சுருக்கமாக விளக்கியிருக்கிறார். தீயச்சொற்களை, மறந்தும் எக்காரணம் கொண்டும் சொல்லாத ஒருவன் உண்மையில் ஒழுக்கம் உடையவனாகத்தான் இருக்க முடியும். அதாவது ஒழுக்கததிற் சிறந்த ஒருவனுடைய வாயிலிருந்து மறந்தும் ஒரு தீய சொல் வெளிவராது. ஒருவன் பேசும் ஒரு சில சொற்களிலிருந்தே அவனுடைய ஒழுக்கத்தைப்பற்றி ஒரளவு தெரிந்து கொள்ளலாம். ஒருவனுடைய சூழ்நிலையும் செயல்களுமே அவனுடைய பண்பாட்டை உருவாக்குவனவாகும். பண்பாட்டிற்குத் தக்கவாறுதான் அவனுடைய வாய்ச்சொற்கள் அமையும், ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் மேடையில் ஏறி அழகாகச் சொற்பொழிவு நிகழ்த்துவதை அவனுடைய வாய்ச்சொற்களாக எடுத்துக்கொண்டு அவனுடைய ஒழுக்கத்தை எடை போட்டுவிடக் கூடாது. அது ஒருசில பாடங்களை ஒப்புவித்தல் போன்றது உண்மையான வாய்ச்சொல் தெரிய வேண்டும் ஆனால் தனித்து உரையாடும் பொழுது அவனைச் வாயிலிருந்து வரும் சொற்களே அவனுடைய குணத்தை வெளிப்படுத்தும். ஆகவே மேடைப் பேச்சை மட்டும் கேட்டு ஒருவனுடைய ஒழுக்கத்தைப்பற்றி முடிவு செய்வது பெரும்பாலும் தவறுகும்.

உயிரினும் சிறந்த இவ்வொழுக்கம் ஒருவனுடைய சூழ்நிலையின் காரணமாக அமைவது என்றாலும் இவனுடைய தன் முயற்சியாலும் அது சிறப்புறும். ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள் நல்ஒழுக்கம் உடையவர்களாக வாழ்வார்களேயானால் அவர்களுடைய வாய்ச் சொற்கள் எப்பொழுதும் நல்லவைகளாகவே இருக்கும். சின்னஞ் சிறிய வயது முதல் நல்ல இனிய சொற்களையே கேட்டுப் பழகிய அவர்களுடைய மக்கள், நிச்சயமாக ஒழுக்கசீலர்களாகவும், இனியவை  கூறுபவர்களாகவும் தான் வளர்ச்சியடைவார்கள் ஆதலால் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி ஒன்று, சிறுவர்கள் தானே, நாம் பேசுவது அவர்களுக்கு எங்கே விளங்கப்பபோகிறது எனக் கருதித் தீயச்சொற்களை அவர்கள்  முன்னிலையில் பயன்படுத்தி வந்தால் நிச்சயமாக அச்சொற்கள் அச்சிறுவர்களின் பிற்கால வாழ்க்கையில் பெருங்கேடுகளை விளைவிக்கும். சுமார் 2 வயது முதல் 6 வயதிற்குள் ஒவ்வொருவருடைய குணங்களும் உருவாகி விடுவதாக உளநூல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆதலால்தான் எச்சூழ்நிலையிலும், மறந்தும் தீய சொற்களைச் சொல்லக்கூடாது என வள்ளுவர் எச்சரிக்கிறார். அத்தீய சொற்கள் அவனுடைய உள்ளத்தைக்கெடுப்பதன்றி கேட்பவர்களின் சிந்தனையையும் கெடுத்து விடுகின்றது.

சூழ்நிலை காரணமாக ஒழுக்கம் கெட்டவர் திருந்திக்கொள்வதற்கும் ஒருவழியை வகுத்துத் தந்திருக்கிறார். நமது ஆசிரியர்" ஒருவன் ஒழுக்கம் உடையவனாக வாழவேண்டுமானால் தன் வாயிலிருந்து தீய சொல் ஒன்றுகூட வெளிவராத வண்ணம் நாவைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். தீய சொல் கூறுவது நின்று விட்டால் நாளடைவில் அவனது உள்ளம் பண்பட்டு விடும். அவனது ஒழுக்கமும் மேன்மையுறும். தீய சொல் கூறும் பழக்கத்தை எவ்வாறு நிறுத்துவது என்பதற்கும் வள்ளுவரே வழி வகுத்துத் தந்திருக்கிறார். தன்னைக் காட்டிலும் அறிவிலும் ஒழுக்கத்திலும், அனுபவத்திலும் சிறந்த பெரியோரைத் துணைக்கொண்டு, எந்தச்சூழ்நிலையிலும் யாரிடமும் உரையாடும் பொழுது இனிய சொற்களையே பயன்படுத்துவது ; என ஒருவன் உறுதி பூண்டால் அவன் நிச்சயமாக விரைவில் வெற்றியடைவான். எனது நண்பர் ஒருவர் சிறு குழந்தைகளையும் தன்னிடம் வேலை பார்க்கும் வேலைக்காரர்களையும் கூட “சாமி! வாருங்கள், போங்கள் இதைச் செய்யுங்கள் என்று மிகவும் மரியாதையாக வேண்டிக்கொள்வதையும் அவர்கள் அவரிடம் பன்மடங்கு மரியாதையுடனும், அன்புடனும் பழகுவதையும் கண்டு வியப்படைந்திருக்கிறேன். ஆகவே “மரியாதை வாரம்" கொண்டாடும் பொழுது மட்டும் இனிய சொற்கள் கூறினால் போதும் மட்டும் எனக் கருதாமல் வாழ்நாள் முழுவதுமே இனிய சொற்களே கூறும் நோன்பை ஒவ்வொருவரும் மேற்கொண்டால், சொல்வோரும், கேட்போரும் இன்புறுவது அன்றி அவர்களுடைய பிற்காலச் சந்ததிகளும் நல்லொழுக்கம் உடையவார்களாகத் திகழ்வார்கள் என்பது உறுதி.

“இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்பக் காய்கவர்ந் தற்று"

நத்தானியேல் ஹாத்தர்ன்

நத்தானியேல் ஹாத்தர்ன் என்ற பிரபல அமெரிக்க எழுத்தாளரைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அவர் எழுத்தாளராவதற்கு முன் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். வழக்கம் போல் ஒருநாள் தனது அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு ஒரு பேரிடி காத்திருந்தது. தனது கடமைகளைப் பொறுப்புடனும், உற்சாகத்துடனும், திறமையுடனும் செய்து வந்த அவரை யாது காரணத்தாலோ வேலையின்று நீக்கினார்கள். உத்திரவைப் படித்துப்பார்த்த அவர் சிறிது நேரம் திகைத்து செயலற்@று உட்கார்ந்து விட்டார். மனது குடும்ப ஏழ்மை நிலையை எண்ணிப் பார்த்தார். மனம் துணுக்குற்றது. அன்பு மனைவியை எண்ணினார். உத்தியோகம் ஒன்றையே நம்பி வாழ்க்கை நடத்தி வந்த அவருக்கு தனது குடும்பத்தை இனி எவ்வாறு காப்பாற்றப் போகிறோம் அதிர்ச்சி தரக்கூடிய இச்செய்தியை மனைவி கேட்டால் எவ்வாறு துடிதுத்துப் போவாள், என்றெல்லாம் மனக் கண்முன் கொண்டு வந்து நிறுத்திப் பார்த்தார். ஒன்றும் ஒடவில்லை. துக்கக் கடலில் மூழ்கியவராய், செய்வதொன்றமறியாது, கால் சென்ற வழி நடந்து சோர்ந்து போய் வீடு திரும்பினார்.

திரும்பி இருப்பதைக் கண்ணுற்ற அவருடைய மனைவி, அவராகவே வாய்விட்டு நடந்ததைச் சொல்லட்டுமெனக் காத்திருந்தாள். உடல் நோய் ஒன்றுமில்லையென்பதை மட்டும் உணர்ந்து கொண்டாள். சுமார் அரைமணி நேரமௌனத்திற்குப் பின் பெருமூச்செறிந்து கொண்டே “என்னை வேலையினின்று நீக்கி விட்டார்கள்" என்று தட்டுத்தடுமாறிக் கூறினார். உத்திரவையும் மனைவியிடம் காட்டினார்.

காலையில் மிக உற்சாகமாக அலுவலகத்திற்குப் புறப்பட்டுச் சென்ற கணவனை தடவிக் கொடுத்து புன் சிரிப்புடன் “நீங்கள் இனிமேல் உங்கள் புத்தகத்தை எழுதலாம். மனம் தளராதீர்ள்" என்று ஊக்கப்படுத்தி புத்தகம் எழுதத் தூண்டினாள். சோர்ந்து போயிருந்த உள்ளம் துடிதுடித்தது. உணர்ச்சி கிளர்ந்தெழுந்தது. அன்று பேனாவைக் கையில் எடுத்து எழுதத் தொடங்கியவர், அருமை மனைவி பக்கத்திலிருந்து ஆர்வமூட்ட மிக உற்சாகத்துடன், உலகப் புகழ்பெற்ற தனது நூலை எழுதி முடித்தார். அந்த ஒரு நூலே அவரை அமெரிக்காவின் தலை சிறந்த எழுத்தாளராக உலகிற்கு அறிமுகப்படுத்தியது, மனையறத்திற்குத் தக்க நற்குண, நற் செய்கைளை உடைய மனைவி காரியம் யாவினும் கை கொடுத்து ஊக்கியதால்தான். அவர் பெயரும் புகழும் என்றென்றும் நிலைத்து நிற்கிறது.

“மனைத்தக்க மாண்புடையவள் ஆகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை"

என்ற திருவள்ளுவநாயனார் வாய்மொழி வாழ்க்கைத் துணைவியின் இலக்கணத்தை வகுத்திருக்கிறது. அவ்வழியைப் பின்பற்றி இந்த அமெரிக்கப் பெண்மணி வாழ்ந்ததால் தான் அவளும் சிறப்புற்று, தனது கணவனையும் உலகில் ஒரு உன்னத நிலைக்குக் கொண்டுவர முடிந்தது என்பதில் சிறிதேனும் ஐயமுண்டோ?

“வஞ்ச மனத்தான் படிற்றெழுக்கம் பூதங்கள்
ஐந்;தும் அகத்தே நகும்"   

கார் விளக்கும் திருக்குறளும்!

எனது வாழ்க்கையில் ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால் அதற்காகப் பொருத்தமாக வள்ளுவர் ஏதாவது கூறிச் சென்றிருக்கிறார்? என ஒப்பிட்டுப்பார்ப்பது எனது பைத்தியக்கார நடவடிக்கைகளுள் ஒன்று ஒருநாள் இரவுநேரத்தில் காரில் முன் ஆசனத்தில் அமர்ந்து பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். எதிரே ஒரு லாரி வந்தது. லாரி பஸ்ஸின் ஒளிமிகுந்த முன்விளக்குகள் அணைக்கப்பட்டன. சில வண்டிகள் சென்றதும் காரின் விளக்குகள் ஏற்றப்பட்டன. லாhரியின் விளக்குகள் அணைக்கப்பட்டன. இந்த மாதிரி மாறி செல்லும்வரை விளக்குகள் அணைக்கும் படலம், ஏற்றும் படலம் நடைபெற்றது. இது போன்ற நிகழ்ச்சிகளை எல்லோரும் கண்டிருக்கலாம். ஆயினும் இச்சமம்பவத்ததை யாரும் பெரிதாக நினைப்பதில்லை. திருக்குறள் பைத்தியமாகிய நான் அவ்வாறு அசட்டையாக இருந்துவிடமுடியுமா? வழக்கம் போல் இந்நிகழ்ச்சிக்கும் பொருத்தமாக வள்ளுவர் ஏதாவது குறட்பா இயற்றியிருக்கின்றரா? என யோசிக்கத் தொடங்கினேன்.

இப்பொழுது கூறுங்கள் கார், லாரி சம்வத்திற்கு, வள்ளுவர் காட்டிய காதலன், காதலி சம்பவம் பொருந்துமா இல்லையா என்று? ஆனால் கார், லாரி இவ்விரண்டில் காதலன் யார், காதலி யார் என்று மட்டும் தயவுசெய்து கேட்டுவிடாதீர்கள். எங்காவது காரும் லாரியும் மோதிக்கொண்டால் காதல் உச்சக் கட்டத்தை அடைந்து விட்டதெனக் கருதாதீர்கள்!  பீங்களன் “எல்லாப் பொருளும் இதன் பாலுள் இதனபால் இல்லா எப்பொருளும் இல்லையால்" என்று மதுரைத் தமிழ் நாயனூர் சிறப்பித்துப் பாடியிருக்கிறரே?

இச்சம்பவத்திற்குப் பொருத்தமான குறள் இல்லாமலா போகும்? மூளை சுறுசுறுப்படைந்தது. அறத்துப்பால், பொருட்பால் இரண்டிலுமுள்ள குறட்பாக்களை மளமளவென நினைவுக்குக் கொண்டு வந்தேன். ஊஹ{ம்! பொருத்தமான குறளே தென்படவில்லை இறுதியாக இன்பத்துப்பாலில் உள்ள குறட்பாக்களை நினைவு படுத்தினேன். ஆஹா! என்ன அருமை யான காட்சிகளையெல்லாம் வள்ளுவர் நம்கண் முன்னால் திரைப்படக் காட்சிபோல கொண்டுவருகிறர்! நமது கார், லாரி சம்பவத்திற்குப் பொருத்தமான ஒன்று.

ஊழின் வலியால், சோலையில் விளையாடும் தலைமகள் ஒருத்தியை, வேட்டையாட வந்த தலைமகன். ஒருவன் எதிர்பாரத விதமான தனித்துச்  சந்திக்கிவறன். தேவமாதோ! என மயங்குகிறன். பின்னர் மானட மாதுதான எனத்தெளிந்து, அவளுடைய குறிப்பையறிய முயலுகிறான். இருவரும் காதல் கொள்கின்றனர். இதன் அவளைப் பாராதவிடத்து அவள் இவனை அன்போடு பார்த்தாள். அவ்விதம் பார்த்து நாணத்தினுல் தலைவணங்கினுள். அக்குறிப்பானது அவர்கள் இருவருக்கும் நடுவே உண்டாகிய அன்பு என்னும் பயிரானது வளர, அப்பயிரிடனித்தே, அத்தலைவி வார்த்த தண்ணீராயிற்று. அத்துடன் நின்றதா காதல் நாடகம்? நமது கார், லாரி சம்பவத்திற்குப் பொருத்தமான குறள் இனித்தான் வருகிறது.

தலைமகன் தலைவியைப் பார்க்குமிடத்து அவள் எதிர்த்து அவனைப் பாராது, தலைவணங்கி நிலத்தைப் பார்த்த வண்ணமாக நிற்கின்றன். அவ்விதம் அவள் செய்வதையறிந்த தலைமகன் அவளைப் பாராதது போன்று பாவனை செய்கிறன். உடனே அவள் நன்றாக அவனை ஏறெடுத்துக்  கண்குளிரக்கண்டு தனக்குள்ளேயே மகிழ்ச்சியடைகிறாள். அது புன்முறுவலாக வெளிப்படுகிறது. இக்காட்சியைத்தலைமகள் கூறுவதாகவே வள்ளுவர் அமைத்துக்குறள் இயக்கியிருக்கின்றார். படியுங்கள்.

யான் நோக்குங்கால் நிலன் நோக்கும. நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும். (குறள் 10940
இப்பொழுது கூறுங்கள்' கார் லாரி சம்பவத்திற்கு வள்ளுவர் காடடிய காதலன் காதலி சம்பவம் பொருந்துமா இல்லையா?

 “யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்"         (குறள் 1094)

கம்பர் பாடலில் தமிழ்ச் சங்கம்


கவிச்சக்கரவர்த்தி கம்பர் தனது இராமாயணத்தில் கிட்கிந்தர் காண்டம் நாடுவிட்ட படலத்தில்  தமிழ்ச் சங்கத்திற்கும் தமிழுக்கும் ஒரு பெரிய சிறப்பையளித்திருக்கின்றார். பாருங்கள் சீதா தேவியைத் தேடிவர நாட்டின் எல்லாப் பாகங்களுக்கும் தூதர்கள் அனுப்பப்படுகிறார். தென்திசைக்கு அனுமான் அனுப்பபபடுகிறார். தென்திசைசெல்@லும் வழியை வரித்துக் கூறி வருகிறார், சுக்கிரீவன். அவ்வாறு கூறிவருங்கால ஒரு பாடலில் சுக்கிரீவன் வாய்மொழியாகக் கம்பர் தென்றமிழ்நாட்டின் பொதியில் திரு.அகத்தியமுனிவன் தமிழ்ச் சங்கம் சேர் குற்றீரேல் என்றும் அவனுறை விடமாமாதலான் அம்மலையையிடத்திட்டேகி| என்று அகத்திய முனிவனின் தமிழ்ச்சங்கத்தைச் சுற்றிப்போகும் படியும் எக்காரணம் கொண்டும் அங்கு சென்றுவிடவேண்டாமென்றும் எச்சரிக்கிறார்.

தமிழ்ச்சங்கம் இருக்கும் பகுதிக்குச் செல்ல வேண்டாமென்று கட்டளையிட்டதின் காரணம் யாது? அகத்திய முனிவன் என்ற பெரியோர் இருக்கும் மலையில் துஷ்டனாகிய இராவனண் சீதையை சிறை வைக்க மாட்டானென்ற நம்பிக்கை மட்டுமல்ல.

தமிழ்ச் சங்கத்தில் சதா பல புலவாகள் தமிழாராய்ச்சியில் ஆழ்ந்திருப்பார்கள்.

இனிமையான தமிழ் மொழியின் ஒலியைக் கேட்டுச் சொக்கிப் போய், அனுமான் தான்வந்த காரியத்தை மறந்து போய் அச்சங்கத்திலேயே தங்கிவிடுவான்.

அவ்வாறு விபரீதம் நேர்ந்துவிடக்கூடாதே என சுக்கிரீவன் அஞ்சி அவ்வாறு கூறியதாகப் பாடலே அமைத்துத் தமிழ் மொழிக்கும் தமிழ் முனிக்கும் மாபெரும் சிறப்பை அளித்திருக்கிறார். கல்வியில் பெரிய கம்பர்.

இரண்டாம் ஆண்டு நிறைவு சிறப்பிதழ்

திருக்குறளில் ஆடு!

திருக்குறளில் ஆட்டைப் பற்றிய குறிப்பு ஒன்று காணப்படுகிறது.
   
“ஊக்கம் உடையான் ஒடுக்கம்பொரு தகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து" (486) தகர்-ஆடு.

வலிமை வாய்ந்த அரசன் ஒருவன் தன் பகைவன்மேல் போருக்குச் செல்லாமல் தக்க காலத்தை எதிர்நோக்கித் காத்திருப்பது போர் செய்யும் ஆட்டுக்கிடாய் தன் பகைக் கிடாய் மீது  பாய்ந்து தாக்குவதற்காகப் பின் வாங்குவது போன்றதாகும்.

ஆட்டுக் கிடாய்கள் போர் செய்யும் போது ஒன்றையென்று தாக்கப் பின்னோக்கிச் சென்று, பின் முன்னோக்கிப் பாயும் இயல்பினை உவமையாகக் குறிப்பிடும் அழகே அழகு.

குளமும்கோபுரமும்

சுற்றி ஒருவித இயல்பு உண்டாம்வாளை மீன்களுக்கு.          ; ஊற்றுக் கண்களுக்கருகே அவை அக்கண்களை அடைக்க முயலுவது போன்று அங்கேயே சுற்றிச் சுற்றி வருமாம், வாளைமீன் விடப்பட்ட கேணி ஊற்;றேடைபட்டுப் போகுமென்றும் கூறப்படுகிறது. வாளைமீன்கள் சிலவற்றைக் கொணர்ந்து, கமலாலயத் தெப்பத்தில் விடச்செய்து அவற்றின் உதவியால் ஊற்றுக் கண்களின் இருப்பிடத்தை அறிந்தார். தபதி தற்காலிகமான ஊற்றை அடைத்துக் கொண்டிருந்த தண்ணீரை இறைத்து வற்றச்செய்தார் ஊற்றுக் கண்களை அடைத்து வைத்திருந்ததால், இருந்த தண்ணீரை வெளியேற்றுவதில் சிரமம் ஏதும் இல்லை படிக்கட்டு வேலைகளைப்பூர்த்தி செய்த பின்னர் ஊற்றுக் கண்களைத் திறந்து விட்டாராம் அவர்.

அதே போன்று தஞ்சை தபதி யாரும் சாரப்பள்ளம் என்ற ஊரிலிருந்து பஞ்சு மூட்டைகளை சரிவாக அடுக்கி, எவ்விதசேதமுமில்லாமல் ஒற்றைக் கல்லை மேலே ஏற்றித் திருப்பணியை பூர்த்தி செய்தாராம்.

இவ்வரலாற்றின் உண்மையை ஆதாரப் பூர்வமாகப் பெரியவரால் காட்டமுடியாவிட்டாலும் கர்ண பரம்பரையாக வழங்கி வரும் இக்கதை எங்கள் மனதை பெரிதும் கவர்ந்தது. பெரியவருக்கும் எங்கள் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துவிட்டு நாங்கள் அடுத்த ரயிலில் ஊர் திரும்பினோம்.

ஓடும்பேருந்தில்

சமீபத்தில் நான் பயணம் செய்தடவுன் பஸ்ஸில் வந்த கண்டக்டர் சிறந்த நகைச்சுவையாளர் பஸ்ஸில் வந்த பயணிகள் அனைவரையும் தனது பேச்சால் சிரிக்கவைத்துக் கொண்டே வந்தார் அதே சமயம் தனது கடமையையும் சரிவர ஆற்றி வந்தார்.

பஸ் நிற்கு மிடங்களில் வண்டி நின்றதும் கீழே நின்று கொண்டிருந்த பயணிகளை தயவு செய்து சீக்கிரமாக ஏறுங்கள்! வண்டி அநியாயமாக வெய்யிலில் நிற்கிறது என்று வேடிக்கையாகக் கூறினார் பயணிகளும் சிரித்துக் கொண்டே வேகமாக ஏறினார்கள்.

வண்டி கடைசி ஸ்டாப்பை நெருங்கியது யாராவது டிக்கெட் வாங்காதிருந்தால் உடனே வாங்கிவிடுங்கள் இல்லையெனில் இரண்டு ரூபாய் கிடைக்கும் என்றர் இரண்டு ரூபாய் கிடைத்தால் நல்லது தானே என்றேன்.

டிக்கெட் வாங்காதவர்கள் இரண்டு ரூபாய் அபராதம் கட்ட நேரிடுமென்ற செய்தியை அவர் பயணிகள் மனம்புண்படாதபடி நாசூக்காகக் கூறிய முறை பாராட்டத்தகுந்ததாக இருந்தது இவரைப் போன்றபல கண்டர்கள் பணியாற்றினால் யாதை வாரம் என்று தனியாக ஒரு வாரம் கொண்டாட வேண்டிய அவசியமே இருக்காதென கருதுகிறேன்.

திருவள்ளுவர் சீர் பரவுவார்-5

இவர் அஞ்சல் துறையிலும் மதுரை மீனாட்சி நூற்பாலையிலும் பணிபுரிந்து வந்த காலங்களில் குறட்பாக்களைக் கருத்துரையுடன் ஆயிரக்கணக்கான அட்டையில் அச்சிட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். சினிமா சிலேடுகளில் குறட்பாக்களை வரைந்து திரைப்படக் கொட்டகைகளில் காட்டச்செய்திருக்கிறார்: எனாமல் போர்டுகள் தயார் செய்து குறட்பாக்களை எழுதி, பஸ்நிலையம் போன்ற பொது இடங்களில் மக்கள் பலரும் காணும் வண்ணம் வைத்திருக்கிறார். திருக்குறள் வகுப்புகள் வாரச் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் பல நடத்தியுள்ளார்:

மாணவர்களிடையே திருக்குறள் மனப்பாடப் போட்டிகள் வைத்துப் பரிசுகள் வழங்கியுள்ளார். இவ்வாறு பல்லாற்றானும் திருக்குறள் தொண்டுகள் செய்து தற்போது திருச்சி, பாரதமின் கனரகத் தொழிற்சாலையில் பணிபுரியும் தம் மகனுடன் வாழ்ந்து வருகிறார். இவர் இன்னும் பல்லாண்டுகள் வாழ்க! இவர்தம் திருக்குறள் தொண்டு மேலும் சிறக்க! என வள்ளுவர் வழி வாழ்த்துகிறது.

திருவள்ளுவர் கழக வெள்ளிவழா

மதுரைத் திருவள்ளுவர் கழகத்தின் வெள்ளிவிழா 1967 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 5 முதல் 10ஆம் தேதிவரை மாபெரும் விழாவாக நடத்தப் பெற்றது மதுரையில் நடைபெற்ற தமிழ் விழாக்களில் இவ்வெள்ளி விழாவும் குறிப்பானதாகும்.

இவ்விழாவில் வரவேற்புக்குழுத் தலைவராகத் தமிழவேல் திரு.பி.டி அரசன் அவர்களும் பொதுச் செயலாளராகத் திரு.பழனியப்பன் அவர்களும் பொருளாளாரகத் திரு.க.சண்முகசுந்தரம் அவர்களும் மற்றும் பல தமிழ்த்தொண்டர்களும் இருந்து இவ்விழாவினைச் சிறப்பாக நடத்தினர்கள்.

குறளின் பெருமையை விளக்குவதாக இவ்விழா அமைந்தது. இவ்விழாப்பற்றிய ஏனைய விவரங்களைத் திருவள்ளுவர் கழக வெள்ளிவிழா மலரின் காணலாம்.

தமிழ் விழாக்கள் பல கண்ட மதுரை அவற்றிற்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டினைக் கொண்டாடவிருக்கிறது.

தமிழர் பண்பாட்டின் தொன்மையையும் சாவா மூவாத்தமிழ் மொழியின் சிரிழமைத்திறன் குன்றப் பெருமையையும் கட்டிக்காத்து வரும் மதுரையில் இவ்விழா நடப்பது எல்லாவகையிலும் சிறப்புடையதாகும்.

நிரோட்டகத் திருக்குறட்பா!

நிரோடட்கப் பாக்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் ஓட்டம் என்ற சொல்லுக்கு உதடு மேலுதடு என்று பொருள். நீர்+ஒட்டம் நிரோட்டம் எனவும் கூறப்படும். விசாரம் என்ற சொல்லுக்கு எதிர்மறை நிர்விசாரம், மலம், நிர்மலம் என்பது போல ஒட்டத்திற்கு எதிர் மறை நிரோட்டம்.

உதடுகளின் உதவியின்றிப் பாடுதல் நிரோட்டகப்பாக்கள் எனப்படும். இப்பொழுது நாம் சற்று எழுத்தக்களின் பிறப்பிலக்கணத்தை ஆராய வேண்டியிருக்கிறது. உ.ஊ.ஒஓ.ஓள விதழ் குவிவே (நன்னூல்) உதடுகள் குவிதலால் உ.ஊ.ஒ.ஒ.ஒள என்ற ஐந்து எழுத்துக்களும் பிறக்கிறதாக நன்னூல் ஆசிரியர் கூறுகிறார் கீழுதடுப் பம்மப் பிறக்கும் மேலு தடும் கீழுதடும் பொருந்தப்படும். இவ்விரண்டும் பிறக்கும் மேற்பல் இதழுற மேவிடும் வவ்வே மேல் வாய்ப் பல்லைக் கீழுதடு பொருந்த வகராமானது பிறக்கும். மேற்குறிப்பிடப்பட்ட மூன்று சூத்திரங்களும் உதடுகளின் உதவியால் பிறக்கக் கூடிய எழுத்துக்களைக் காட்டுகின்றன. ஆதலால் நிரோட்டகப்பாக்கள் இயற்ற வேண்டுமென்றால் உ.ஊ.ஒ.ஒ.ஒள என்ற உயிர் எழுத்துக்கள் ஐந்தும், ப்,ம்,வ் என்ற மெய்யெழுத்துக்கள் மூன்றும் அப்பாக்களில் வரக்கூடாதெனத் தெரிகிறது. இவ்வெட்டு எழுத்துக்களையும் நீக்கிப் பாடல்கள் இயற்றுவதென்பது எளிதான செயலன்று செயற்கரிய செய்யும் பெரியார்களால் தான் இயலும்.

சிவப்பிரகாசசுவாமிகள் திருச்செந்தூர் நிரோட்டக யமக அந்தாதி பாடியிருக்கின்றார்கள் மாம்பழக் கவிச்சிங்க நாவலரவர்கள் அகர பாடலைப் பாடியிருக்கின்றார்கள்.

வித்துவான் தேர்வில் மாகாணத்தில் முதல் வராகத் தேர்ந்து திருப்பனந்தாள் 1000 ரூபாய் பரிசும் பெற்ற உத்தமபாளையம் பண்டிதவித்துவான் சங்குப் புலவர்களுடைய தகப்பனார் பூசாரிக் கவுண்டன்பட்டி ச.திருமலை வேற் கவிராயரவர்களுடைய நிரோட்டக நேரிசை வெண்பா இக்காலத்திற்கேற்ப கொஞ்சம் எளிய நடையில் அமைந்திருக்கிறது.

இனி திருக்குறளிலுள்ள நிரோட்டகப்பாவிற்கு வருவோம் 1330 திருக்குறட்பாக்களிலும் எங்காவது நிரோட்டகப்பா காணப்படுகிறது என ஆராய்ந்தேன். ஆராய்ந்ததில் மேலே குறிப்பிடப்பட்ட 8 எழுத்துக்களும் நீக்கப்பட்ட பாடல் ஒன்றே ஒன்று தான் இருப்பதையறிந்து மகிழ்ந்தேன்

“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வகையம்" என்றதற்கிணங்க
“வள்ளுவர் வழி" அன்பர்களும் படித்து இன்புற
அக்குறட் பாவைக் கீழே தருகிறேன்.
அக்குறட் பாவைக் கீழே தருகிறேன்.
“எய்தற் கரிய தியைந்தக்காலந்நிலையே
செய்தற் கரிய செயல்"    (பொருட்பால் 49வது அதிகாரம் குறள் எண்9)

திருக்குறள் எனாமல் போர்டுகள்

வள்ளுவன் குறளே வையகம் முழுதும் பரப்பும் நோக்கத்துடன் கருத்துரையுடன் திருக்குறள் அட்டைகள் பல்லாயிரக்கணக்கில் அச்சிட்டு இவவசமாக வழங்கியும் சினிமாக்களில் குறள் சிலேடுகள் காண்பித்தும் சிறு சிறு புத்தகங்கள் வெளியிட்டும் வந்த எமது கழகத்தார் தற்சமயப் கீழ்க்கண்டாறு எழுதப்பட்ட 3அடி நீளம் 1½ அடி அகலத்தில் என்னாமல் போர்டுகள் தயாரித்து ஒவ்வொரு ஊரிலும் பஸ் நிலையம் போன்றபொது இடங்களின் மாட்டிவைக்கும் பணியில் இறங்கியிருக்கின்றார்கள்.

(ஒவ்வொரு போர்டிலும் வெவ்வேறு குறள்)

“அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்”

கருத்துரை: அறிவுடையவர்களென எல்லாச் செல்வமும் உடையவர்கள் அறிவில்லாதவர் எத்தகைய செல்வம் பெற்றிருந்தாலும் அவர் இல்லாதவரே யாவர்.

பொருளுதவி......

அரை நூற்றாண்டு சென்றலும் வெய்யில், மழை, காற்றுக்குக் கெட்டுப் போகாது அது மாதிரி போர்டு ஒன்று தயாரித்து பொது இடத்தில் மாட்டிவைக்கும் கழகத்தாருக்கு ரூ.30 முப்பது மட்டும் செலவாகிறது.

அத்தொகையை மனமுவந்து அளிக்கும் அன்பரின் பெயர் முகவரி அந்த போர்டின் அடியில் பொருளுதவி இன்னா என்ற பகுதியில் குறிப்பொன்றவர்களுக்கு விளம்பரம் போன்றும் பயன்படுகின்றது. சில அன்பர்களின் பொருளுதவியால் ஏற்கனவே சில போர்டுகள் தயாரிக்கப்பட்டு கோம்பை சின்னமனூர் குச்சனூர், தேனி வத்தலக்குண்டு முதலான ஊர்களில் பொது இடங்களில் மாட்டி வைக்கப்பட்டு திருக்குறள் கருத்துக்கள் பரவி மக்களுக்குப் புத்துணர்ச்சியை ஊட்டி வருகின்றன. இத்தொண்டில் ஈடுபட விரும்பும் அன்பர்கள் மதுரை மாவட்டத் தமிழ்த் தொண்டர்கள் கழகம் செயலகம் கோம்பை என்ற முகவரிக்கு போர்டு ஒன்றுக்கு ரூ.30ஃ- வீதம் அனுப்பி தமிழக நாட்டிலுள்ள எல்லா ஊர்களிலும் இம்மாதிரி போர்டுகள் மாட்டி வைக்க உதவி புரியுமாறு வேண்டுகின்றேன்.

கவிஞனின் வாக்கு

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமலைக்கொழுந்துக் கவிராயரை, இயற்பெயரைக் கொண்டு அறியாத சிலரும் “செந்தூரப் பொட்டுக் கவிராயர்" என்ற காரணப் பெயரைக் கொண்டு அறிந்திருந்தனர். அவருடைய நெற்றியின் நடுவில் பெரிய செந்துரப்பொட்டு எப்பொழுதும் காட்சியளித்துக் கொண்டிருக்கும். அப்பொட்டு இல்லாமல் அவரைக் காணுவதே அரிது. தேவியின் அருள் பெற்றவர். அவருடைய வாக்கு உறுதியாய்ப் பலிக்குமென்ற அச்சத்தால் அரசன் முதல் ஆண்டி வரை அவரிடம் யாரும் நெருக்கமாகப்பயப்படுவார்கள். அவர் எங்கு சென்றினும், தக்க மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டார்.

   செந்தூரப் பொட்டுக் கவிராயாரென்று அழைக்கப்பட்ட இந்த திருமலைக் கொழுந்துக் கவிராயர் ஒரு சமயம் மேற்குத் தொடர்ச்சி மலையை அடுத்துள்ள தேவாரம் என்ற ஊருக்கு வந்தார். அக்காலத்தில் அச்சிற்றூரும் அதையடுத்த சில கிராமங்களும் ஒரு சிற்றரசனின் ஆளுகைக்குட்பட்டிருந்தன. அவ்வரசனின் மாளிகைக்குள் சென்ற கவிஞர் அரசன் இல்லாதிருந்தும், நேரே தயக்கமின்றிச் சென்று அரசன் அமரும் அரியாசனத்திலேயே அமர்ந்து விட்டார். அங்கிருந்தோர் அனைவர்க்கும் இவருடைய துணிவு பெருவியப்பையளித்தது. அரசன் வந்தால், தங்களைச்சினந்து கொள்வானே, என்ற அச்சம் பணியாளர்களுக்கு பணியாளர்கள் சிலருக்குக் கோபம் வந்தாலும், கவிஞனின் கம்பீரமான தோற்றம் கவிஞனிடம் நெருங்கவோ, கண்டித்துக்கூறவோ முடியாத நிலையில் வைத்து விட்டது அவர்களை.

ஆழ்ந்தயோசனையில் தலையைக் குனிந்து கொண்டே உள்ளே வந்த சிற்றரசனை “வாடா, முத்துச்சாமி" என்ற சொற்கள் தூக்கி வாரிப்போடச் செய்தது. தலை நிமிர்ந்து பார்த்த அரசன் தனது அரியணையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்த செந்தூரப் பொட்டுக் கவிராயரைக் கண்டதும் புன்முறுவல் பூத்து, கவிஞனை வரவேற்றார். அருகிலிருந்த பணியாட்கள் வியப்புக் கடலில்@ மூழ்கினர். கவிஞனுக்குத்@தக்க பரிசுகள் வழங்கியனுப்பிய பின், எல்லோருக்கும் விளங்க எடுத்துரைத்தார். “வாடாமுத்துச்சாமி" என்று என்னை “டா" போட்டு இழிவாகக் கவிராயர் அழைத்து விட்டதாகக் கருதி விட்டீர்கள். அவருடைய கருத்து அதுவல்ல . என்றும் வாடாத வாட்டமில்லாத முத்துச்சாமி என்றே கூறினார். ஒரு அருட்கவியிடமிருந்து அவ்வாக்குக் கிட்டியதற்கும் பெருமகிழ்ச்சியடைகிறேன். என் அரசன் விளக்கிக் கூறியதும் கவிஞனின் பெருமையைப் புரிந்து கொள்ளாமல் தாங்கள் முட்டாள்தனமாக நடந்து கொள்ளவிருந்ததை எண்ணி வெட்கினர் உடனிருந்தோர்.

தேவாரம் சிற்றரசரிடம் விடை பெற்றுக் கொண்ட கவிஞர் போடிநாயக்கனூர் சிற்றரசரிடம் பரிசுகள் பெற்றுக் கொண்டு, பெரியகுளம் என்ற ஊருக்கு வந்து சேர்ந்தார். காலையில் அவ்வூரிலுள்ள சிறுஓடையில் நீராடிவிட்டு வழக்கம் போல் செந்தூரப் பொட்டு இட்டுக் கொண்டிருந்தார்.

சூரியமுத்துப் பிள்ளையென்ற பெரியார் ஒருவர் அங்கு வந்து சேர்ந்தார். அவரும் நல்ல புலமை மிக்கவர். ஆனால் சற்றுக் கர்வி. மற்றப் புலவர்களை மட்டம் தட்டிப் பேசுவதில் விருப்புள்ளவர். தோற்றத்திலிருந்து நமது செந்தூரப்பொட்டுக் கவிராயரை ஒரு புலவரென அறிந்து கொண்டார். தமது கைவரிசையைக் காட்டத்தொடங்கினார். “ஐயா! தாங்கள் யார்?" என வினவினார். “எனது இயற்பெயர் திருமலைக்கொழுந்து தாங்கள் யாரோ?" என்று பதிலுக்குக் கேட்டார் கவிஞர்.

“ஓ! திருமலைக்கொழுந்தா! எமது பெயர் சூரியமுத்து: சூரியனைக் கண்டால் கொழுந்@து வாடுமே?" என்று இறுமாப்பாகக் கூறினார் சூரியமுத்துப் பிள்ளை. கவிஞனைமட்டம் தட்டிவிட்டதாக நினைப்பு. இச்சொற்களைக் கேட்டதுந்தான் சூரியமுத்துப்பிள்ளை வேண்டுமென்றே தம்மை அவமானப்படுத்த எண்ணுகிறாரென்பதை உணர்ந்தார். உடனே “சூரியனனால் ராகு தீண்டுமே?" என்று கேட்டுவிட்டுத் தன் வழியே சென்று விட்டார்.

குளித்து விட்டு வீட்டிற்குத்திரும்பிய சூரியமுத்துப்பிள்ளை கொடியில் உலரப் போட்டிருந்த வேட்டியைக் கட்டிக் கொள்ள எடுத்தார்@@@@ அவ்வேட்டியிலிருந்து பாம்பு ஒன்று தீண்டி சிறிது நேரத்தில் உயிர் நீத்தார். “சூரியனனால் ராகு தீண்டுமே? என்ற கவிஞனின் வாக்கு மெய்யாகியது.

முற்காலக் கவிஞர்களுடைய வாக்குகள் உடனுக்குடன் பலித்திருப்பதை இது மாதிரியான பல வரலாறுகளால் அறிகிறோம். இதைக்குறித்தே வள்ளுவனாரும்,

“வில்லேரு நழவர் பகைகொளினுங் கொள்ளற்க
சொல்லேருழவர் பகை"
என்று கூறிச் சென்றார் போலும்!.

நாஞ்சில் நாட்டின் வளம்
க.சண்முகசுந்தரம்

“உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்திற்கு இரு பக்கங்களிலும் இடி" என்ற நாட்டுப் பழமொழியை நாம் நன்கு அறிவோம்.ஆனால் தமிழனுக்கோ எல்லாப் பக்கங்களிலும் இடியாக இருக்கிறது. தமிழன்மட்டும் அவ்வாறுஇடிபடக் காரணம் என்ன? அவன் என்ன பாவம் செய்தான்?மனமார யாருக்காவது தீங்கு நினைத்தானா? சோம்பேறியாய், குத்தியிருந்துகொண்டு பிறருடைய உழைப்பால் உண்டு கொழுத்துவாழ விரும்பினானா? ஆதிக்க வெறியால் பிறரை அடிமை கொண்டானா? அடக்கி ஆள நினைத்தானா? பிறருக்கு இன்னல் கனவிலும் கருதியதுண்டா?

“இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்தவோ சால்பு"

என்ற சீரிய கொள்கைக்கிணங்க பிறர்துன்பம் செய்த போதிலும் பொறுத்துக்கொண்டு அவர்களுக்கும் நன்மையே செய்ய விரும்பும் தமிழனுக்கு மட்டும் ஏன் இந்தத் தொல்லைகளெல்லாம் வருகின்றன? எந்த நாட்டிற்குச் சென்றாலும்,தன்னுடையஅறிவுக் கூர்மையாலும் கடின உழைப்பாலும், அந்த நாட்டை முன்னுக்குக் கொண்டு வந்தான் அதன் பயன் என்ன? உதிரத்தை சாறாகப் பிழிந்து உருவாக்கிய இடத்தில் வாழ முடியாத நிலையில் இருக்கிறான். ஆப்பிரிக்கா, இலங்கை, பர்மா, மலேசியா முதலிய இடங்களிலிருந்து விரட்டப்படுகிறான். குடியேறிய நாடுகளில் தான் அக்கதியென்றால், பூர்விகமான தனது தாய்நாட்டிலாவது அவன் நிம்மதியாக வாழ முடிகிறதா?

     உதாரணமாக நாஞ்சில் நாட்டை எடுத்துக்கொள்வோம். நாஞ்சில் நாடு தமிழனுக்கே உரியதென்பது சரித்திரம், சங்க இலக்கியங்கள், சில சாசனங்கள்  சான்று கூறும் உண்மை அங்கு வாழும் மக்கள் பேசும் மொழியோ தூயத் தமிழ்  அவர்களுடைய பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்@கள்@, பண்பாடு முழுவதும் தமிழர்களுடையனவே!அண்மையில் அப்பகுதிகளில் நான் சுற்றுப் பயணம் செய்த சமயம் அவற்றை நன்கு உணர்ந்தேன். இன்றும் கவனிக்கப்போனால், திருவாங்கூர்-கொச்சி அரசாங்கத்தின் தலைநகராக விளங்கும் திருவனந்தபுரம் நகரில் வாழும் மக்களில் பாதிப்பேருக்குமேல் அசல் தமிழர்கள்! வியாபாரத்துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் அனைவரும் தமிழரே! ஆயினும் தமிழர்கள் திருவனந்தபுரம் நகரை விட்டுக் கொடுக்குமாறு கேட்கவில்லை. முழுக்க முழுக்கத் தமிழர்களே வாழும் பகுதிளான 12 தாலுகாக்களை மட்டும்தான் தாய்த்தமிழகத்துடன் சேர்த்துவிடுமாறு போராடுகிறார்கள். நாஞ்சில்நாடு பிரிந்து போகாமல் தங்களுடைய ஆதிக்கத்திலேயே தான் இருக்கவேண்டுமென்பதற்கு மலையாளிகள் கூறும் காரணம்தான் மிக விசித்திரமானது.

கல்லாத ஒருவனுக்குத் தன் வாய்ச் சொற்களே எமனாகமுடியுமென்றும், மெல்லிய வாழைக்குத்தான் ஈன்ற காய்களே கூற்றமென்றும், அல்லவை செய்தார்க்கு அறங்கூற்றமென்றும், வீட்டிலிருந்துகொண்டு தீயசெயல்களில் ஈடுபடுபவள் தனக்குத் தானே எமனாக முடிகிறாளென்றும் “நான் மணிக்கடிகை" என்றநூல் கூறுகிறது. நாஞ்சில் நாடு என்ற நஞ்செய் நாட்டிற்கு அந்நாட்டின் வளமே கூற்றமாக அமைந்திருக்கிறது.
எங்களுக்கு நல்ல நெல் வேண்டும் அதைத் தருவது நாஞ்சில் நாடு! பணம் தருவது ஏலக்காய், ரப்பர், தேயிலை, காப்பி, மிளகு போன்ற விளை பொருள்கள் அவற்றை ஏராளமாகத் தருவது மூணாறு, தேவிகுளம், ஆதலால் இப்பகுதிகளை எக்காரணம் கொண்டும் விடமாட்டோம் “எனமார்தட்டிக் கூறுகின்றனர்மலையாளிகள். அதும்ட்டுமா? கோவை மாவட்டத்தின் மேற்குப்பகுதியும், உதகமண்டலமும், லட்சத் தீவுகளும், மாலத்தீவுகளும், தங்கள் ஐக்கியகேரளத்துடன சேர்க்கப்படவேண்டுமென மலையாள காங்கிரசு கோரியிருக்கிறது. நெல்லும்,மணியும் வரையாது வழங்கும் இப்பகுதி மக்களுக்கு ஏதாவதுஉரிமை வழங்கியிருக்கிறார்களா? அந்தத் தமிழினம் பெருக, நல்ல தமிழ்க் கல்வி கற்க,சுகமாக வாழ இதுவரை மலையாள அரசாங்கம் ஏதாவது வழி செய்திருக்கிறதா? அதுதானில்@லை  “உழைக்க மட்டும் தான் கடமைப்பட்டிருக்கிறீர்கள். உழைப்பின் பயனை அனுபவிக்க நாங்கள் இருக்கிறோம்" என்கிறார்கள் மலையாளிகள் இநநாஞசில் நாட்@டின் வளத்தைப்பற்றி நமது தமிழ்@ இலக்கியங்கள் கூறும் சில பகுதிகளைக் கண்N@டாம்.

  “மனோன்மணியம்" என்ற சிறந்த நாடக நூலை இயற்றிய பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் தமது நூலில் நாஞசில் நாட்டைப்பற்றிக்கூறியுள்ள பகுதிகளை நினைவு கூர்வோம்.

   “வஞ்சி நாடதனில் நன்செய்@ நாடு எனச் செந்தமிழ் வழங்குந்தேயமொன்றுள்ளது. அதன் அந்தம் இல்பெரு வளம் அறிவார் யாரோ? மருதமும் நெய்தலும் மயங்கி அங்கெங்கும் புரையறுசெல்வம் நிலைபெறவளரும்,
..............................................
...............................................
இப்பெருந் தேயத்து எங்கும்இராப்பகல்
தப்பினும் மாரிதன் கடன் தவறா
கொண்டு என்னுங்கொள்கலன்கொண்ட
அமிழ்தினை அவ்வயிற்
     கவிழ்த்தபின் செல்வுழி
வடியும் நீரெநம் மிடிதீர் சாரல்
...................................................
........................................................
....................................................
தூவியால் தம்முடல் நீவிடிற்
                சிரிக்கும்
சிறுமியர் என்ன அச்
            செழுநிலநங்கை
உழுபடைக் கொழுமுனை
            தொடுமுனங்கூசி
உடல் குழைந்து எங்கும்
            உலப்பறு செல்வப்
பயிர் மயிர் சிலிர்த்துப்பல்வளம் நகுவன்
எங்கட்கு அந்நாடு உரித்தாம்@அன்குப்
பரவு பாடையும் விரவு ஆசாரமும்
நோக்கில் வேறொரு சாக்கியம்

இரவு பகல் வரத்தவறினாலும், மழைமட்டும் தன் கடன் தவறாது பொழியும் நாடு, மழை வளம் அவ்வாறிருக்க நிலவளத்திற்கு ஒரு அழகான உவமை கூறுகிறார் நமது பேராசிரியராவார்கள். நமது வீட்டிலுள்ள சிறுமியர்களை நாம் ஏதாவது பறவை இறகு கொண்டு உடம்பில் கிளி ~கிச்சுக்| காட்டுவது வழக்கம்.அச்சிறுமியும் மிகக்கூசி உடனே சிரிப்பாள். அவள் சிரிப்பைக்கண்டு நாமும் மகிழ்ச்சியடைவோம். அது போன்று நாஞ்சில் நாட்டு நில நங்கையானவள்@ உழுபடைகொழுமுனை தன் மேல் படுமுன்பே,உடல் கூசி, பொலபொலவெனப் பயிர் சிலிர்த்துபல்வளம் நல்குவாளாம்.

இன்னுமா திருக்குறளுக்கு எதிர்ப்பு?

“தமிழ்நாடு" ஆசிரியர் அவர்களுக்கு,

“மதுரையில் திருக்குறளுக்கு எதிர்ப்பு" என்ற தலைப்பில் 4-3-55 இதழில் வெளிவந்துள்ள தலையங்கத்தைப்பிடித்து வியப்படைந்தோம். தன்மானமுள்ள தமிழர்கள் யாவரும் வியக்கத்தான் செய்வார்கள்.

வியப்படைவது மட்டுமல்@ல ஆத்திரமும் கொள்வார்கள். ஆதலால் வள்ளுவப் பெருமானின் வாய்மொழி தான் அவர்களுடைய ஆத்திரத்தை, ஆவேசத்தை அடங்கச்செய்யும்.

“இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்தவோ சால்பு" என்ற சால்பு உணர்ச்சிதான் அவர்களுடைய கோபத்தை, ஆத்திரத்தை, அடக்கிவைக்கும்.

ஒரு சில ஆண்டுகளுக்குமுன் எங்கள் மதுரை மாவட்டத் தமிழ்த் தொண்டர் கழகத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான திருக்குறள் அட்டைகள் வெளியிட்டு இலவசமாக வழங்கி வந்தோம். பின்னர் எனாமல் போர்டுகளிலும் திருக்குறளைப் பொறித்துப் பல பொதுஇடங்களில் மாட்டிவைத்தோம். அப்பணிகள் மக்களுக்கு நல்ல பயனளித்ததைக் கண்டு மனமகிழ்ந்தோம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய குறட்பாக்களை எனாமல் எழுத்துக்களால்@ தான் எங்களால் பொறிக்க முடிந்தது.

திருப்பனந்தாள் மகாசன்னிதானமவர்கள் திருவுளங்கொண்டு சலவைக் கற்களில் குறட்பாக்களைப் பொறித்து மதுரை மீனாட்சி ஆலயப் பொற்றாமரைக் குளத்தைச் சுற்றி அமைக்க ஏற்பாடுகள் செய்திருப்பதைப் பத்திரிக்கைகளின் வாயிலாக அறிந்து புனகாங்கிமடைந்தோம்.
ஆனால், அப்புனிதமான செயலுக்கு இடையூறு செய்ய ஒரு சில “புண்ணியவான்கள்" கிளம்பியிருப்பதை, அதுவும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் “இப்பேரறிஞர்கள்" கிளம்பியிருப்பது விந்தையே!
மக்களுக்கு திருக்குறளின் பால் எத்துணை அபிமானமிருக்கிறது என்பதைச் சோதிப்பதற்காக எதிர்ப்@பை கிளப்புகிறார்கள் போலும்! வள்ளுவன் தன்னை உலகிற்கே தந்து வான்புகழ்கொண்ட தமிழ் நாட்டில், வள்ளுவன் இயற்றிய அறநூலுக்கு அறநிலையத்தில் இடமில்லை என்று துணிந்து கூறக்கூடிய தமிழர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது விந்தையிலும் விந்தையே இச்சிறு எதிர்ப்புக்களைச்சிறிதும் பொருட்படுத்தாது அறநிலையைக் காப்பாளர்கள் கூடிய விரைவில் திருப்பனந்தான் சுவாமிகள் தொடங்கியுள்ள நற்பணி நிறைவேற உதவிபுரிவார்களென எதிர்பார்க்கிறோம்,

க.சண்முகசுந்தரம்

தீபாவளி விருந்து

காந்தி அடிகள் லண்டனுக்கு பாரிச்டர் தேர்வு எழுதச்சென்றிருந்தார். அப்போது அவருக்கு இந்தியா லீக்கிலிருற்து ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தனர. குறித்த காலத்திற்கு  முன்பே காந்தியடிகள்விருந்துச் சாப்பாடு தயாரிக்கும. இடத்திற்கு வந்து தன்னை இன்னாரென்று தெரிவித்துக்கொள்ளாது தானும. உடனிருந்து சமையல் வேலையில் உதவி புரிந்தார். பிறகு விருந்து நடந்தது. அபபோது தான் தமக்கு உதவி புரிற்தவர் காற்திளடிகள் என்று அறிந்து ஆச்சரியப்பட்டனர இந்த நிகழ்ச்சியை ஒரு முறை என் நண்பரகளிடம் கூறினேன் அத்துடன் நில்லாது தீபாவளி வருகிறதே றாம் அனைவரும. சேர்ந்து ஒரு விருந்து தயாரித்து உண்ணுவோமா? என்றேன்;

ஒரு நண்பன் விருந்தும் உணவாக இருப்பதை விட சிற்றுண்டி யாக இருப்பது நல்லது ஏதாவது உப்புமா தயாரிக்கலாம் என்றான். முன்பே இருமுறை நாம். சிறுறுண்டி தயார் செய்து உண்டிருக்கோமே இம்முறை சமையல் செய்து தான் பாரப்போமே எனக்கு சுமாராக சமைக்கத்தெரியும் என்றேன்.

ஐயோ உன் சமையலா! யா சாப்பிடுவது? உடனே வைத்தியரைத் தேடிப்போக வேண்டியது தான்! இருந்தாலும் பரவாயில்லை நாள்தோறும் வீட்டுச்சாப்பாடு சாப்பிட்டு அலுப்புத்தட்டி விட்டது. நாமே சொந்தத்தில் தயாரித்து உண்பதிலும் ஒரு தனி ருசி இருக்கும்.ஆனால் சாமான்கள் ஒன்ருமில்லையே"?

"எல்லா சாமான்களையும் கடைலில் வாங்கிக்கொள்வோம்.காகிதம் எழுதுகோல் எடுத்து பட்டியல் எழுது. அரிச pபருப்புமிளகாய் புளி.........

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது தான் இந்த உரையாடல் நடந்தது. எனது பெற்றோர்கள்வேற்றூர்சென்றிருந்தார்கள். என் வீட்டில் நான் மட்டும் இருந்தேன். வேளா வேளைக்கு அக்கா வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் வயது வந்த பெரியவர்கள்தனியே இருக்க பயப்படும் எங்கள் பெரிய வீட்டில் நான் மட்டும் தனியாக இருப்பது சிரமமாக இருந்ததால் தோழர்களோடு இருப்பேன்.

நல்ல வேளையாக அடுப்படியில் சில மண்பானைகள் இருந்தன. அவற்றைப்பயன்படுத்திச் சமையல் செய்ய முடிவு செய்தோம். அண்டைவீடுகளில்எல்லோரும் தூங்கிய பின் இரவு 12 மணிக்கு மேல் அடுப்பு மூட்டி சமையல் செய்வதென்றும் காலை நான்கு மணிக்கெல்லாம் சாப்பாட்டை முடித்துஇடத்தை சுத்தம் செய்து ஒழுங்கு படுத்தி விடுவதென்.றும்திட்டம்.

   சாமான்கள் எல்லாம் ஒருவருக்கும் தெரியாமல் இரவு 10 மணிக்கு வுPடு வந்து சேர்ந்தன.சரியாக 12 மணிக்கு எழுPந்து சமையலைத்தொடங்கினோம். ஒருவர் காய்கறி நறுக்கினார். ஒருவர் புளியைக்கரைத்தார் ஒருவர் விறகுஒடித்து தந்தார்.மற்றொருவர் பிரமாதமாக வேலை செய்வதாக நடித்தார். இன்னும் இருவர் வேலை செய்யா விட்டாலும் சள சளவென்று பேசிக்கொண்டு  தொந்தரவு அளித்ததுமல்லாமல் அடுப்பு பற்றாமல் அதனுடன் போராடிக் கொண்டிருந்த என்னைக்கேலி செய்து கொண்டு
இருந்தனர்.

இபபோராட்.டத்திற்கிடையேசோறு வெந்து வடிக்க வேண்டிய நிலை வந்தது. நண்பர் ஒருவர் உதவியால் சோற்றுப்பானையை இறக்கி மண்பானை என்ற நினைவில்லாமல் ஆண்களின் முரட்டு சுபாவத்திற்கிணங்;க 'டங்' என பக்கத்தில் இருந்த அம்மி மேல் வைத்தேன் பானையின் அடிப்பாகம் உடைந்து நீரும் சோறும. கீழே ஓடத்தொடங்கின. அப்புறம் தான் எனது வடிகட்டிய முட்டாள் தனம் விளங்கியது.

கொடியில் கிடக்கும் வேட்டியை சீக்கிரம் எடப்பா என்று கத்தி பின்னர் அந்த வேட்டியில் சோற்றைக்கொட்டி  நீரை நீக்கி ஒருவாறு பக்குவப்படுத்தி வைத்தோம்.

குழம்பை ஊற்றி சோற்றைப்பிசைந்து வாயில் போட்டதும் ஒவ்வொருடைய முகத்தையும் பார்க்க வேண்டுமே! தொடக்கத்திலேயே இந்த ஏற்பாட்டை எதிர்த்த நண்பர்கள் நண்பர் சமையல் செய்தால் யார் சாப்பிடுவது என்று முதலிலேயே சொன்னோமே கேட்டீர்களா நிறைய பண்டங்கiளிற் வாங்கி வுPணாக்கியது தான் மிச்சம். குழம்பை வாயில் வைக்க முடியவில்லையே
என்றார்கள். பரிமாறிக்கொண்டிருந்த நான் என்ன குறை
என்று கேட்டேன் குழம்புக்கு உப்பில்லை என்பதை அந்த சூரப்பிள்ளைகளுக்குச்சொல்ல முடியவில்லை. காய்கறிகளை சுவை பார்த்ததில் அவற்றிலும் உப்பில்லை என்பது தெரிந்தது. பிறகு தான் ஒன்றிற்கும் உப'புப்போட வில்லை என்ற நினைவு வந்தது. உப்பைத்தேடினேன். கிpடைக்கவில்லை.சாமான்கள் வாங்கி வந்த பையையும் பார்த்தேன். சாமான்கள் வாங்கி வந்த  நண்பரைப்பார்த்து உப்பு வாங்கி வரவில்லையா என்று கேட்டேன்.

நீகொடுத்த பட்டியலிலுள்ள சாமான்கள் அத்தனையும் வாங்கி வந்து விட்டேன் என்று உறுதி கூறினார். பட்டியலைப்பார்த்ததில் உப்பே எழுதப்பட வில்லை  என்பது தெரிந்தது. இனி என்ன செய்வது உப்பில்லாப்பண்டம் குப்பையிலே தானே .இரவு 3 மணிக்கு எங்கு சென்று உப்பு வாங்குவது. பக்கத்து வீடுகளுக்கு தெரியக்கூடாது.

காய்கறிகளும் சமைக்கப்பட்ட பின் இலைகளைப்போட்டு நண்பர்களுக்குப்பரிமாறினோம். நாங்;களேதயாரித்த உணவை உண்ணுவதில் எங்களுக்கு ஓர் மகிழ்ச்சி;.குழம்பை ஊற்றநல்ல வேளையாக அடுப்படியில் சில மண்பானைகள் இருந்தன. அவற்றைப்பயன்படுத்திச் சமையல் செய்ய முடிவு செய்தோம். அண்டைவீடுகளில்எல்லோரும் தூங்கிய பின் இரவு 12 மணிக்கு மேல் அடுப்பு மூட்டி சமையல் செய்வதென்றும் காலை நான்கு மணிக்கெல்லாம் சாப்பாட்டை முடித்துஇடத்தை சுத்தம் செய்து ஒழுங்கு படுத்தி விடுவதென்.றும்திட்டம்.

   சாமான்கள் எல்லாம் ஒருவருக்கும் தெரியாமல் இரவு 10 மணிக்கு வுPடு வந்து சேர்ந்தன.சரியாக 12 மணிக்கு எழுPந்து சமையலைத்தொடங்கினோம். ஒருவர் காய்கறி நறுக்கினார். ஒருவர் புளியைக்கரைத்தார் ஒருவர் விறகுஒடித்து தந்தார்.மற்றொருவர் பிரமாதமாக வேலை செய்வதாக நடித்தார். இன்னும் இருவர் வேலை செய்யா விட்டாலும் சள சளவென்று பேசிக்கொண்டு  தொந்தரவு அளித்ததுமல்லாமல் அடுப்பு பற்றாமல் அதனுடன் போராடிக் கொண்டிருந்த என்னைக்கேலி செய்து கொண்டு
இருந்தனர்.உப்பில்லாப்பண்டம் குப்பையில் தானே!

முனைவர்.செ.வை.சண்முகம்.