திருக்குறள் சிறப்பு

திருக்குறள் சிறப்பு

ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும்
பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பின் - போயொருத்தர்
வாய்க்கேட்க நூலுனவோ மன்னு  தமிழ்ப்புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்
                                                                        - நத்தத்தனார்

ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி
வேதபி பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோர்
உள்ளுதொறும் உள்ளுதொறும் உள்ளம் உருக்குமே
வள்ளலுவர் வாய்மொழி மாண்பு.
                                                                         - மாங்குடி மருதனார்

எல்லாப் பொருளும் இதன்பால் உள; இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லால்
பறந்தபா வால்என் பயனவள் ளுவனார்
கரந்தபா வையத் துணை.
                                                                        - மதுரைத் தமிழ் நாயனார்

பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புதேம்
ஆவிற்கு அருமுனியா யானைக்கு - அமரரும்பல்
தேவில் திருமால் எனச்சிறந்தது என்பவே
பாவிற்கு வள்ளுவர்வெண் பா.
                                                                          - கவிசாகரப் பெருந்தேவனார்

அறமுப்பத் தெட்டுப் பொருளெழுபது இன்பத்
திறம்இருபத் தைந்தால் தெளிய - முறைமையால்
வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
ஓதவழுக்கு அற்றது உலகு.
                                                                          - மதுரைப் பெருமருதனார்

TEXT BOOK ON MORAL LIFE

It is a text book of indispensable authority on moral life. The maxim of Valluvar has touched my soul.

                                                                          - Mahatma Gandhi

'ஒன்றே பொருளெனின் வேறொன்பர்;
                 வேறெனின்
அன்றென்பர் ஆறு சமயத்தார்
                  நன்றென
எப்பாலவரும் இயைபாவே வள்ளுவனார்
          முப்பால் மொழிந்த மொழி'
                                                                          - கல்லாடர்


மழையானது மக்கள் போற்றவேண்டிய ஒன்று. ஏனெனில், அது உண்ணும் பொருள்களை உண்டாக்கிக் கொடுத்துத் தானும் உணவாக மாறுகிறது. பெரியோர்களைப் போற்றுங்கள். மனைவி, மக்களோடு வாழுங்கள். விருப்பு, வெறுப்பு அற்று வாழுங்கள். இது ஒரு தொகுப்பு.

'படி, படிக்கவேண்டியவைகளைப் படி! குற்றமறப் படி; படிக்காவிட்டாலும் கேள்; படித்து, கேட்டு அறிந்தபடி நட'. இது ஒரு தொகுப்பு.

'சூதாடாதே! பொய் சொல்லாதே! புலால் உண்ணாதே! கல் குடியாதே! களவு செய்யாதே! வஞ்சகம் கொள்ளாதே! தீயன எண்ணாதே! இது ஒரு தொகுப்பு!

"நட்புத் தேவை; அதை ஆராய்ந்துகொள்! தீயவர் உறவை நோயென விலக்கு! பெரியோரைப் துணைக் கொள்! பிறரோடும் அன்பாயிரு! மனைவியை மதி! மக்களை பெறு! அறிவை அடை! சொல்வதெல்லாம் நல்லதாக இருக்கட்டும்! செய்வதெல்லாம் திறமையாக இருக்கட்டும்! அறத்தின் வழிநின்று பொருளைத் தேடி இன்பத்தைப் பெறு! வீடு உண்டானால் அது உன்னைத் தேடி வரும்! என்பதே.

இவைதான் வள்ளுவருடைய கொள்கை. அதைத்தான் நீங்கள் திருக்குறளில் பார்க்க முடியும். இது எந்த நாட்டிற்கு, எந்த மக்களுக்கு, எந்த நிறத்தினருக்கு, எந்த மொழியினர்க்கு, எந்தச் சமயத்தினர்க்கு வேறுபாடு உடையது? இராது! அவ்வளவு பெரிய உயர்ந்த கருத்துக்களைக் கொண்டவர் வள்ளுவர்.

                                                                         - கி.ஆ.பெ. விசுவநாதம்

Tirukkural is the well known literary composition in the Sangam classics. This work proclaims the basic principles for the moral and material life of the people. The aphoirsms about 'loving-kindness' reveal the humane approach of the poet to the problems of life. The lofty ideals that are enshrined in thus didactic work transcends the barriers of race, creed, place and time. Besides, this universal and cosmopolitan outlook, Tirukkural shines supreme in its poetic excellences.

                                                                          - Dr. Wilfred Noelle

No comments: